நடப்பு
கல்வியாண்டில், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்பட்டுள்ளதை தொடர்ந்து,
நீண்டகாலமாக அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகள் மற்றும் பிளே ஸ்கூல்ஸ்
மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி
எச்சரித்துள்ளார்.
தமிழக அரசு
பள்ளிகளின் அங்கீகாரம் சார்ந்த விஷயத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக அதிரடி
நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கோவை
மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த, 14 தனியார் நர்சரி
பிரைமரி பள்ளிகள் அதிரடியாக மூடுவதற்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
நடப்பு
கல்வியாண்டில், குறுகிய கால இடைவெளியில் துவங்கப்பட்டு, விதிமுறைகளின்படி
செயல்படாத பள்ளிகள் மட்டுமே, வடிகட்டி மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து, நீண்ட
காலமாக அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் செயல்படும் தனியார் பள்ளிகள் மற்றும்
பிளே ஸ்கூல், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கல்வியாண்டு துவக்கம் முதலே
ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
முதன்மை கல்வி
அதிகாரி ஞானகவுரி கூறுகையில், "நீண்ட காலமாக அங்கீகாரம் புதுப்பிக்காத
பள்ளிகள் அதற்குரிய பணிகளை உடனடியாக துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்,
பிளே ஸ்கூல்ஸ் உட்பட அங்கீகாரம் புதுப்பிக்காத தனியார் பள்ளிகள்,
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மீது இக்கல்வியாண்டில் நடவடிக்கை எடுக்கப்படும்"
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...