பெங்களூரு: 'கம்ப்யூட்டர் கல்வி தொடர்பான
தேர்வில் வெற்றி பெறாத, அரசு பட்டப்படிப்பு கல்லூரியின் பேராசிரியர்கள்
மற்றும் ஊழியர்கள், பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் அல்ல' என,
பட்டப்படிப்பு கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
கல்வி
கற்பிப்பதில் ஆசிரியர்கள், ஊழியர்களின் பங்களிப்பு மிக முக்கியம். எனவே,
சிவில் சேவை நியமனம் சட்டம் - 2012ஐ செயல்படுத்தி, கல்வியின் தரத்தை
அதிகரிக்க, கல்வித்துறை முன்வந்துள்ளது. முதற்கட்டமாக, 'கம்ப்யூட்டர் கல்வி
தொடர்பான தேர்வில் வெற்றி பெறாத, அரசு பட்டப்படிப்பு கல்லூரி
பேராசிரியர்கள்
மற்றும்
ஊழியர்கள், பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் அல்ல' என, பட்டப்படிப்பு
கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை
இயக்குனர் வெளியிட்டுள்ள உத்தரவில், 'இதுவரை, கம்ப்யூட்டர் தேர்வில்
தேர்ச்சி பெறாத ஊழியர்களுக்கு, கம்ப்யூட்டர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய
வேண்டும். இதற்கு, எவ்வளவு பணம் செலவாகும் என்பதை கணக்கிட்டு அனுப்ப
வேண்டும்' என, தெரிவித்துள்ளார். இந்த விதிமுறை அமலுக்கு வந்த பின், மூன்று
ஆண்டுக்குள், கம்ப்யூட்டர் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...