'பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் எண்ணை ட்டாயமாக தெரிவிக்க வேண்டும்,'என, அரசு உத்தரவிட்டுள்ளது.
எஸ்.சி.,எஸ்.டி., மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள்,
சுகாதாரப்பணி மேற்கொள்வோரின் பிள்ளைகள், ஆதிதிராவிட மாணவிகள், மத்திய,
மாநில அரசுகள் நடத்தும் திறனறி தேர்வுகளில் வெற்றிபெறுவோர், இடை நிற்றலை
தவிர்க்க உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் அரசின் மூலம் அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்துறை வங்கிகளில்
கணக்கு துவங்கி வழங்கப்படுகின்றன. இதில் நடைபெறும் சில குளறுபடிகளை
தவிர்க்க மாணவர்கள் ஆதார் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என அரசு
உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“கல்வி
உதவித்தொகை பெறும் மாணவர்களின் ஆதார் எண் சேகரிக்கப்பட்டு அரசிற்கு
அனுப்பப்பட்டு, வங்கி கணக்குடன் இணைக்கப்படுகிறது. ஒருவேளை ஆதார் அட்டை
இல்லையெனில் மாணவர்கள் அதற்கான புகைப்படம் எடுக்க பெற்றோர்களிடம்
அறிவுறுத்தப்பட்டு அதற்கு கால அவகாசம் தரப்படுகிறது. காலதாமதம், குழப்பத்தை
தவிர்க்கவே ஆதார் எண் கட்டாயம் என்ற முடிவை அரசு
அமல்படுத்துகிறது,”என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...