சிவகங்கை அருகே அரசுப் பள்ளியில்
பணிபுரியும் மாற்றுத் திறனாளி ஆசிரியை தனக்கு சம்பளம் வழங்க உத்தரவிடுமாறு,
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகனிடம் செவ்வாய்க்கிழமை மனு
அளித்துள்ளார்.
இது குறித்து, மாற்றுத் திறனாளி ஆசிரியை
மணிமேகலை அம்மனுவில் தெரிவித்திருப்பது: சிவகங்கை மாவட்டம், அ. முறையூர்
அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறேன்.
மாற்றுத் திறனாளியான தனக்கு, கடந்த பிப்ரவரி மாதம் முதல் தணிக்கை தடை எனக்
கூறி ஊதியம் வழங்காமல் தலைமை ஆசிரியர் நிறுத்தி வைத்துள்ளார்.
இது
தொடர்பாக, பல முறை உரிய ஆவணங்களுடன் முறையீடு செய்தும் பயனில்லை. இதனால்,
குடும்பத்தை நடத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகிறேன். மேலும், எனது
குழந்தைகள் படிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எனது ஊதியத்தை உடனடியாக
வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மணிமேகலையுடன், தமிழக தமிழாசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலர் இளங்கோ, மாவட்டச் செயலர் நாகேந்திரன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
இது சம்பந்தமாக, பள்ளிக் கல்வி
இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பதில் கிடைத்தவுடன் நடவடிக்கை
எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...