தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு
விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (மே 15) முதல்
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம்
வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் இரண்டாமாண்டு
தேர்வுகள் வரும் 18-ஆம் தேதி தொடங்கி ஜூன் 3-ஆம் தேதி வரையும், முதலாமாண்டு
தேர்வுகள் வரும் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 4-ஆம் தேதி வரையும்
நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை எழுதவுள்ள தனித் தேர்வர்கள், சிறப்பு
அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருக்கும் தனித் தேர்வர்கள்
அனைவரும் ww.tndge.in என்ற இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்ப எண், பிறந்த
தேதி ஆகியவற்றை பதிந்து வெள்ளிக்கிழமை (மே 15) முதல் மே 22-ஆம் தேதி வரை
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...