மாட்டுப் பாலால் ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளுக்கு வெள்ளாட்டுப் பால்
கொடுக்கலாம், என கால்நடை மருத்துவ பல்கலை ஆராய்ச்சி மையம்
தெரிவித்துள்ளது. மாட்டுப்பால் மூன்று வயதிற்குட்பட்ட சில குழந்தைகளுக்கு
ஒவ்வாமையை ஏற்படுத்தும். இக்குழந்தைகளுக்கு ஆட்டுப்பால் கொடுத்தால் எளிதில்
செரிமானமாகும் என, கால்நடை மருத்துவ பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் அதிகளவில் வெள்ளாடு வளர்க்கப்படுகிறது. ஆனால் ஆட்டுப்பாலை
பெரும்பாலானோர் குடிப்பதில்லை. குழந்தை முதல் பெரியோர் வரை மாட்டுப்பாலையே
விரும்பி குடிக்கின்றனர். மாட்டுப்பால் மூன்று வயதிற்குட்பட்ட சில
குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இக்குழந்தைகளுக்கு ஆட்டுப்பால்
கொடுத்தால் எளிதில் செரிமானமாகும் என, கால்நடை மருத்துவ பல்கலை ஆய்வில்
தெரியவந்துள்ளது.
பல்கலை திண்டுக்கல் ஆராய்ச்சி மையத்தலைவர் பீர்முகமது கூறியதாவது: குட்டி
ஈன்ற ஆட்டில் சராசரியாக ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் பால் கிடைக்கும்.
மூன்றில் 2 பங்கு பாலை குட்டிக்கு கொடுத்துவிட்டு, மீதியுள்ளதை நாம்
பயன்படுத்தலாம். பசும்பாலில் உள்ள ஏ.எஸ்.,1 கேசின் மூலக்கூறு
குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இவை ஆட்டுப்பாலில் இல்லை.
ஆட்டுப்பாலில் உள்ள ஏ.எஸ்.,2 கேசின் மூலக்கூறு எளிதில் செரிக்கும் தன்மை
உடையது. இதில் அமினோ அமிலங்கள் அதிகம் இருப்பதால் சத்துக்குறைவான
குழந்தைகளுக்கு நல்ல உணவு. 'சிஸ்டின்' என்ற அமினோ அமிலம், கால்சியம்,
தாமிரம், இரும்புச்சத்தை உட்கிரகிக்க உதவுகிறது. இதனால் குழந்தைகள்,
பெண்களுக்கு ரத்த சோகை தடுக்கப்படும். கேப்ரிக் கேப்ராயிக், கேப்ரைலிக்
அமிலங்கள் குழந்தைகளுக்கு வலிப்பு நோயை கட்டுப்படுத்தும். இணைந்த
லின்னொலிக் அமிலங்கள் புற்றுநோயை கட்டுப்படுத்தும். செரிமானத்தின்போது
ஏற்படும் துரித புரதக்கூறுகள் ரத்தக்கொதிப்பு ஏற்படாமல் தடுக்கும். ரத்த
நாளங்களில் குருதி கட்டிகள் ஏற்படுவதை கட்டுப்படுத்தி இதயநோய் வராமல்
தடுக்கும். 'டவ்ரின்' அமினோ அமிலம் மூளை வளர்ச்சிக்கும், பித்தநீர் உப்பு
உற்பத்திக்கும் உதவும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...