சர்வதேச
அளவில் மூன்றாம் பாலினத்திற்கான அங்கீகாரங்கள் அதிகரித்து வரும் நிலையில்,
ஆண் மற்றும் பெண் பாலினத்தைச் சேர்ந்தவர்களைக் குறிக்க திரு, திருமதி
(Mr,Miss,Mrs) போன்ற வார்த்தைகளை சிறப்பு முன்னொட்டாக பயன்படுத்தி வருவதைப்
போன்று திருநங்கைகளைக் குறிக்க Mx என்ற சிறப்பு பெயரை பயன்படுத்த
புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு டிக்சனரி திட்டமிட்டுள்ளது.
கடந்த
2 வருடங்களாக எந்த ஆரவாரமும் இன்றி இங்கிலாந்தின் அதிகாரப்பூர்வ படிவங்கள்
மற்றும் தரவுதளங்களில்(databases) திருநங்கைகளைக் குறிக்க
பயன்படுத்தப்பட்டு வந்த Mx என்ற சுருக்கப் பெயரை ஆக்ஸ்போர்டு டிக்சனரி
தனது அடுத்த பதிப்பில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.
இங்கிலாந்தில், அரசு துறைகள், வங்கிகள், சில பல்கலைக் கழகங்கள், என்று பல துறைகளும் தற்போது Mx என்ற சிறப்பு பெயரை ஏற்றுள்ளதாக சண்டே டைம்ஸ் என்ற பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில், அரசு துறைகள், வங்கிகள், சில பல்கலைக் கழகங்கள், என்று பல துறைகளும் தற்போது Mx என்ற சிறப்பு பெயரை ஏற்றுள்ளதாக சண்டே டைம்ஸ் என்ற பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...