'பயன்படுத்தாமல் முடங்கி இருக்கும், 2ஜி, 3ஜி டேட்டா கார்டுகளுக்கு,
மீண்டும் உயிர் கொடுக்க, 'ரீசார்ஜ்' செய்யலாம்' என, பி.எஸ்.என்.எல்.,
அறிவித்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவன இயக்குனர் குப்தா கூறியதாவது:
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், 'பிரீ பெய்டு'
திட்டத்தில் பயன்படுத்தாமல் இருந்த, 2ஜி மற்றும் 3ஜி டேட்டா கார்டுகளை,
மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது, பிப்ரவரி மாதம் நிறுத்தப்பட்டது.
தொழில்நுட்ப காரணங்களுக்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது; தற்போது,
தொழில்நுட்ப இடர்பாடுகள் களையப்பட்டு உள்ளன. இனி, பயன்படுத்தாமல் இருக்கும்
டேட்டா கார்டுகளை, 'ரீசார்ஜ்' செய்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...