ஆய்வக உதவியாளர் தேர்வை பலரும் எழுத முடியாத மறைமுக நிலை இருப்பதாக தேர்வர்கள் புலம்பல்
பள்ளிக்கல்வித் துறையால் அறிவிக்கப்பட்ட 4369 ஆய்வக உதவியாளர் பணியாளர் பணியிடம் அறிவிக்கப்பட்டு இத்தேர்வுக்கு பதியும் போது தேர்வாளரே நேரில் வரவேண்டும் என்றும் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் வரவேண்டும் என்று ஒரு மினி சான்றிதழ் சரிபார்ப்பே நடத்தி தள்ளு முள்ளு நெடுநேரம் வரிசையில் நிற்றல் பச்சிளங்குழந்தையோடு பெண்கள் கர்ப்பிணி பெண்களும் நடக்கவே முடியாத மாற்றுத்திறனாளிகளும் கொளுத்தும் வெயிலில் நின்று பதிந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது..
இதற்கிடையில் பாடப்பகுதிகளை படிக்க நேரம் வெறும் 25 நாட்கள் இருந்த போதிலும் இரவம் பகலும் படிதத தேர்வர்களுக்கு கடந்த 25ம் தேதி வெளியாகிய ஹால்டிக்கெட்டில் அதிர்ச்சியை தந்துள்ளது.. என்னவெனில் இத்தேர்வுக்கு பதிந்திருந்த அனைவருக்குமே ஒருநாலும் இல்லாத அலங்கோலமாக தான் சார்ந்த பகுதியிலிருந்து வெகுதொலைவு தேர்வு மையம் இருப்பது மேலும மனவேதனையை உருவாக்கியுள்ளது
இது குறிதது திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லுர் பகுதியை சேர்ந்த கார்த்திகைகுமார் என்ற இரண்டுகால்களும் செயலிலந்த மாற்றுத்திறனாளி கூறியதாவது: 'நான் இதுவரை எழுதிய டி.என்.பி.எஸ்.ஸி தேர்வுகள் உட்பட பல தேர்வுகள் புளியங்குடி சங்கரன்கோவில் என சுற்றுவட்டாரத்திலேயே உள்ள தேர்வு யைமங்கள் கிடைத்து தேர்வு எழுதினேன். ஆனால் இத்தேர்வுக்கு தேர்வு மையம் ஏர்வாடியில் போடப்பட்டுள்ளது இத்தேர்வுக்கு நான் எனது வீட்டிலிருந்து 5மனிக்கு கிளம்பினாலும் போக முடியாது அதிலும் என்னனை போன்ற முற்றிலும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது என வேதனையோடு கூறினார்..
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் கூட பள்ளியின் முழுமுகவரி மற்றும் தொலைபேசி எண் பின்கோடும் இல்லை. ஆகவே தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு தேர்வு மையம் மற்றும் வழி(பஸ்ரூட்) ஆகியவற்றை அறிய இலவச வழிகாட்டி மையங்களை ஏற்படுத்தி உதவிடவும் வெகுதூரம் செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக மாற்றுவழி செய்திட வேண்டுமென ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம் வலியுறுத்துகிறது..
இப்படிக்கு
பி.இராஜலிங்கம் புளியங்குடி மாநிலப்பொருளாளர்
ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...