சேலம்:தமிழகத்தில், அரசு பள்ளி
ஆசிரியர்களுக்கு, சம்பள பில் தயாரிப்பது முதல், தகவல் பரிமாற்ற கடிதம் வரை,
ஆன்-லைன் மூலமே மேற்கொள்ளப்படும் சூழலில், உதவி தொடக்கக்கல்வி
அலுவலகங்களுக்கு, இதுவரை 'பிராட்பேண்ட்' வசதி செய்துதரப்படாததால், கடும்
அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
சொந்த பணத்தில்...தமிழக தொடக்கக்கல்வித்துறையில்,
34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.
இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சம்பளம், நிலுவைத்தொகை உள்ளிட்டவை
பெற்றுத்தரும் நிர்வாக அலுவலகமாக, உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் உள்ளது. ஒரு
ஒன்றியத்துக்கு ஒரு உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் வீதம்
அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொன்றிலும், 350 முதல், 700 ஆசிரியர்
வரை, சம்பளம் பெறுகின்றனர். இவர்களின் சம்பள பில் தயாரிக்கும் முறை, கடந்த
சில மாதங்களுக்கு முன்பிருந்து, ஆன் - லைனுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய சுற்றறிக்கை, துறை சார்ந்த
கடிதம் உள்ளிட்டவையும், 'இ - மெயில்' மூலமாகவே அனுப்பப்படுகிறது.இதனால்,
உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில், தினமும் பிராட்பேண்ட் வசதியை பயன்படுத்த
வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், இதுவரை எந்த உதவி தொடக்கக்கல்வி
அலுவலகத்துக்கும், இன்டர்நெட் வசதி ஏற்படுத்தித்தரப்படவில்லை. இதனால்,
அங்கு பணிபுரியும் அலுவலர்கள், தங்களது சொந்த பணத்தில், இன்டர்நெட்
பயன்படுத்தி, பணிபுரிய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
ஆன் - லைனில்...இதுகுறித்து, கல்வித்துறை
பணியாளர்கள் கூறியதாவது:உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 10 முதல்
100 ஆசிரியர்கள் இருக்கும் சூழலில், அங்கு பிராட்பேண்ட் இணைப்பு மற்றும்
அதற்கான கட்டணம், அரசால் வழங்கப்படுகிறது. ஆனால், உதவி தொடக்கக்கல்வி
அலுவலகத்தில், பிராட்பேண்ட் வசதியில்லை.இதனால், ஆசிரியர்களிடம் வசூல்வேட்டை
நடத்தியோ, அலுவலர்கள் தங்கள் கைக்காசை செலவழித்தும், இன்டர்நெட் வசதியை
பயன்படுத்த வேண்டிஉள்ளது. அனைத்து பணிகளும், ஆன் லைனில் வழங்கிவிட்டு,
அதற்கான வசதியை ஏற்படுத்தி தராமல் இருப்பது ஏன் என தெரியவில்லை.இவ்வாறு
அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...