பெண் அரசு ஊழியர்களுக்கு
ஆறு மாதம்
மகப்பேறு விடுப்பு
அளிப்பது தொடர்பான
வழிகாட்டு நெறிமுறைகளை
தமிழக அரசு
வெளியிட்டுள்ளது. இது குறித்து பணியாளர் மற்றும்
நிர்வாகச் சீர்திருத்தத்
துறை (பயிற்சி)
முதன்மைச் செயலாளர்
அனிதா ப்ரவீன் அனைத்துத் துறை
செயலாளர்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு
அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசுப் பணியில் நிரந்தரமாக
பணியாற்றும் இளம் தாய்மார்களுக்கு ஆறு மாத
கால மகப்பேறு
விடுப்பு அளிக்கப்படுகிறது.
அவர்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக இருந்தால்
இந்த விடுப்பினைப்
பெற தகுதி
படைத்தவர்கள். தாற்காலிகமாக பணியாற்றுவோருக்கும்
நிபந்தனைகள் அடிப்படையில் விடுப்பு அளிக்கப்படுகிறது. மகப்பேறு காலத்தில் பாதிப்பு ஏற்பட்டு
கரு கலைந்தால்,
அவர்களுக்கு சராசரியான ஊதியத்துடன் ஆறு வாரங்களுக்கு
மகப்பேறு விடுப்பு
அளிக்கப்படும்.
இந்த விடுப்புக் காலம்
என்பது குறைந்தபட்சம்
12 வாரங்களுக்கும் அதிகபட்சம் 20 வாரங்களுக்கு
மிகாமலும் இருக்க
வேண்டும். குழந்தைகள்
பிறக்கும் போதே
இறந்திருந்தால், அத்தகைய தாய்மார்களுக்கு 90
நாள்கள் வரை
மகப்பேறு விடுப்பு
அளிக்கப்படும். எனவே, இத்தகைய தன்மைகளில் மகப்பேறு
விடுப்புகளை துறைத் தலைவர்கள் அளிக்கலாம். மகப்பேறு
விடுப்பு தொடர்பாக
பல்வேறு முரண்பாடான
கருத்துகள் கேட்கப்பட்டுக் கொண்டே இருந்ததால் இந்த
வழிகாட்டு நெறிமுறைகள்
வெளியிடப்படுவதாக அனிதா ப்ரவீன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...