Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வு முடிவு ; முதலிடம் அது பலரிடம் ; முதலிட தேர்வில் புதிய முறை வருமா ?

          இன்றயை 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த முடிவுகள் இது வரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 41 பேர் மாணவ , மாணவிகள் அபார சாதனை படைத்துள்ளனர். இன்றைய தேர்வு முடிவுகளை வெளியிட்டு தேர்வு துறை இயக்குனர் கூறியதாவது: இந்த தேர்தவில் 10 லட்சத்து 60 ஆயிரத்து 866 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இது கடந்த ஆண்டை விட 40 ஆயிரம் பேர் அதிகம். இந்த ஆண்டு முடிந்த தேர்தலில், 92. 9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
95. 4 சதவீதம் மாணவிகளும், 90.4 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முறை மாணவ, மாணவிகள் அரும் பெறும் சாதனை படைத்துள்ளனர். இதனால் அனைத்து முதல் ரேங்கு மாணவர், மாணவிகளின் பெயரை அறிவிக்காமல் ( நேரம் கருதி நான் அரசு பள்ளியில் படித்து முதலிடம் பெற்ற 3 மாணவர்களை மட்டும் அறிவிக்கிறேன் என்றார். 

இன்றைய முடிவில் 499 மார்க்குகள் பெற்று 41 பேர் முதலிடமும், 192 மாணவ, மாணவிகள் இரண்டாமிடமும், 540 பேர் மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்,

ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 853 பேர் அறிவியலில் 100க்கு 100 பெற்றுள்ளனர். கணிதத்தில் 27 ஆயிரத்து 134 பேர் கணிதத்தில் 100க்கு 100 ம், சமூக அறிவியலில் 51 ஆயிரத்து 629 பேர் 100க்கு 100ம், மார்க்குகள் எடுத்துள்ளனர். பிற மொழிப்பாடங்களில் 500 க்கு 500 மார்க்குகள் பெற்று 5 மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர்.

முதலிடம் என்பது ஒருவர் அல்லது இருவர் என பிடித்து வந்த காலம் மாறி பலர் இந்த இடத்தை பிடிக்கும் சூழலை மாணவ, மாணவிகள் உருவாக்கியுள்ளனர்.

பலர் ஒரே மதிப்பெண்கள் பெற்றாலும் , வரும் காலத்தில் இது போன்று முதல் ரேங்கு என்பது எந்த முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என விவாத பொருளாகி இருக்கிறது. முதலிடம், சாம்பியன் யார் என்பது அறிவிப்பதில் இன்னும் பழைய முறையே பின்பற்றாமல் புதிய முறை யோசிக்கலாமே என்பதே தற்போதைய பேச்சு. திருத்தத்தில் மாற்றம் வர வேண்டும். 

முதலிடம் பெற்றவர்கள் பட்டியல் :
10ம் வகுப்பு பொதுத் தேர்தவில் 41 பேர் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். அவர்களின் விபரம் :

முத்துவேணி (செண்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெல்லை),

ஆர்த்தி (ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை, நெல்லை),

கார்த்திக் அருண்( ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி),

நித்யஸ்ரீ (விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,ராமநாதபுரம்),

சசிகலா (அருள்மிகு வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, டி.கல்லுப்பட்டி, மதுரை),

தேவதர்ஷினி (சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழனி)

அர்ச்சனா ( இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குமரன் நகர்,திருப்பூர்)

செல்வநாயகி( பொண்ணு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம், திருப்பூர்)

ஷர்மிளா(விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முத்தூர், திருப்பூர்)

கிருத்திகாயினி(சிவாலிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சங்கம்பாளையம்)

கரோலினா (விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கிணத்துக்கடவு, கோவை)

ஹர்ஷினி(சி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கணபதி, கோவை)

கிருத்திகா (வித்ய விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிக்கந்தர்பாளையம், கோவை)

கார்த்திகா(பிஷப் பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி, கோவை)

ஜனனி (எஸ்.ஆர்.எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு)

தீப்தி (ஸ்ரீ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு)

கோகுல கிருஷ்ணன் (ஜான் பிரிட்டோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சேலம்)

ஜெயநந்தினி(அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வாழப்பாடி, சேலம்)

மாலினி(பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம்)

பூஜம்(செண்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, சேலம்)

ஷாக்ஷினி (க்ரீன் பார்க் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்)

சிநேகா (எஸ்.கே.வி.,மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்)

தனப்பிரியா(ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,கரூர்)

தேவதா நிலானி(பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கரூர்)

பாரதிராஜா (அரசுப்பள்ளி, பரனம்)

ஜெயஸ்ரீ(பாத்திமா மெட்ரிக் பள்ளி, ஜெயங்கொண்டம்)

ரவீணா(தந்தை ரோவர் மெட்ரிக் பள்ளி, பெரம்பலூர்)

ஜோஸ்வின்(செண்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, திருவாரூர்)

வைஷ்ணவி (அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை, திருவாரூர்)

ருக்ஷிதா(பிருந்தாவன் அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாரூர்)

அட்சயம்(பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்)

திவ்யலட்சுமி(மேக்ஸ்வெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்)

முத்தலு (அமலுர்பவம் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி)

கல்பனா(ஸ்ரீநவதுர்க்கா மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி)

ஜஸ்லின் ஜெனிசா(ஜியான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்)

அபிஷ்மா(எல்.இ.எப்.ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்)

ஆர்த்தி(சேது பாஸ்கர மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை)

நந்தினி(செண்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கும்மிடிப்பூண்டி)

அனுகீர்த்தனா(வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சென்னை)

ஷிவானி(வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சென்னை)

அனகீர்த்தனா(வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை)




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive