Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் : பள்ளி கல்வித்துறை அதிரடி

         பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் பகுதி 1ல் உள்ள தமிழ் பாடத்தை கட்டாயமாக மாணவர்கள் பயில வேண்டும். நடப்பு கல்வியாண்டில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பகுதி 1ல் உள்ள தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்.  
 
        2006-07ம் ஆண்டு 1ம் வகுப்பில் பயின்ற மாணவர்கள் 2015-16ம் கல்வியாண்டில் முதன் முதலாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத உள்ளனர். இவர்கள் தமிழ்பாடத்தை பகுதி 1ல் கட்டாயமாக எழுத வேண்டும்.

பகுதி 1ல் தமிழ்மொழி பாடம் தவிர பிற மொழியை பயின்று வந்த மாணவர்கள் 2015-16ம் கல்வியாண்டில் பகுதி 1ல் தமிழ்தேர்வு எழுத இயலாத நிலை ஏற்பட்டால் அதற்கு அந்தந்த பள்ளி தலைமையாசிரியரும், பள்ளி தாளாளரும் பொறுப்பேற்க வேண்டும். வரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி 1ல் தமிழ் மொழி தேர்வு நடத்தப்படும். பிற மொழிகளில் எழுத முடியாது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.




4 Comments:

  1. மிக அருமையான திட்டம். ஆனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி-1 தமிழ் என்பதலிருந்து நொண்டி சாக்கு சொல்லி விதி விலக்கு அளிக்காமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கவலை ஆகும்.

    ReplyDelete
    Replies
    1. கடந்த 2006-2007 கல்வி ஆண்டில் முதல்வகுப்பில் சேர்ந்து பயின்றுவரும் மாணவர்கள் கட்டாயமாக பகுதி-1 ல் தமிழ்மொழிப்பாடத்தை மட்டுமே படிக்க இயலும் என்ற அரசாணையின் தொடர்ச்சியே பள்ளிக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை ஆகும்.எனவே தமிழ்நாட்டில் இவ்வாண்டு முதல் பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுமே பகுதி-1 ல் தமிழை மட்டுமே தேர்ந்தெடுக்கமுடியும்.

      வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்நாடு ! வாழிய நற்றமிழர் !...

      Delete
  2. கொஞ்சம் நம்பிக்கை இருக்கு தமிழ் வாழ்க

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive