சிறையில்
இருந்து பிளஸ் 2 தேர்வு எழுதிய 65 கைதிகளில் 64 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம்
அதிகரித்துள்ளது.
இதுகுறித்த விவரம்:
தமிழக சிறைகளில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத 67 கைதிகள் விண்ணப்பித்து அனுமதி பெற்றிருந்தனர். இவர்களுக்காக சிறைத் துறையும், கல்வித் துறையும் இணைந்து புழல் மத்திய சிறையில் தேர்வு மையத்தை அமைந்திருந்தது. இங்கு விண்ணப்பித்த 67 கைதிகளில் 65 பேர் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் வியாழக்கிழமை வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், சிறையில் தேர்வு எழுதிய கைதிகளில் 64 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதில், புதுக்கோட்டை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும் பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற கைதியான அரியலூரைச் சேர்ந்த கார்த்திக் கண்ணன் 1,062 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். பாடவாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள், தமிழ் - 161, ஆங்கிலம் - 154, வணிகவியல் - 183, கணக்குப்பதிவியல் - 184, பொருளாதாரம் - 184,வரலாறு - 196.
இவருக்கு அடுத்தப்படியாக, கோயம்புத்தூர் மத்திய சிறையில் உள்ள தொடர் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத்தைச் சேர்ந்த கைதி சையது முகம்மது புகாரி 1,059 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றார். பாடவாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள், தமிழ் - 174, ஆங்கிலம் - 156, வணிகவியல் - 188, கணக்குப்பதிவியல் - 181, பொருளாதாரம் - 198, வரலாறு - 162.
புழல் மத்திய சிறையில் இருக்கும் விசாரணைக் கைதியான திருவொற்றியூரைச் சேர்ந்த ஆனந்தன் 1,018 மதிபெண் பெற்று மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார். திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கும் இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள், தமிழ் - 179, ஆங்கிலம் -149, வணிகவியல் - 184,கணக்குப்பதிவியல் - 159, பொருளாதாரம் - 183, வரலாறு - 164.
தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு: சிறையில் தேர்வெழுதிய 65 கைதிகளில், ஒருவர் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 98.5 சதவீதமாகும். கடந்த ஆண்டு 56 கைதிகள் பிளஸ் 2 தேர்வை எழுதினர். அதில், 50 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு, தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளதற்கு சிறைத் துறை அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்து தேர்ச்சி பெற்ற கைதிகளுக்கு, இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...