ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை நீதிபதி குமாரசாமி
இன்று காலை வழங்கினார். அவர் அளித்த 919 பக்க தீர்ப்பின் விபவரம்:
1. குற்றம் சாட்டபட்டவரின் சொத்துக்களுடன், நிறுவங்களின் மதிப்பு, கட்டுமான செலவும் அரசு தரப்பால் சேர்க்கப்பட்டுள்ளன.
2) இதன் மதிப்பு மட்டும் 27,79,88,945
3) இதுபோல், திருணம செலவும் சொத்து மதிப்புடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 6,45,04,222
4) இவை அனைத்தும் சேர்க்கும்போது மொத்த சொத்த மதிப்பு 66,44,73,573என்றாகிறது.
5) ஆகவே, மிகையாக சேர்க்கப்பட்ட திருமண செலவு, நிறுவன மதிப்பு, கட்டுமான செலவுகளை கழித்தால் உண்மையான சொத்து மதிப்பு 37,59,02,466.
6) வருமானம் = 34,76,65,654மொத்த சொத்து = 37,59,02,466வேறுபாடு (வருமானத்திற்க அதிகமான சொத்து) = 2,82,36,812
7) வருமானத்திற்க அதிகமான சொத்தின் சதவீதம் = 8.12%
8)
கிருஷ்ணானந்த் அக்ரிஹேத்தி வழக்கில். வருமானத்திற்கு அதிகமான சொத்தின்
சதவீதம் 10% வரை இருக்கும் பட்சத்தில் வழக்கிலிருந்து விடுவிக்கலாம் என
கூறப்பட்டுள்ளது.
9) ஆந்திர அரசு வருமானத்திற்கு அதிகமான சொத்தின்
சதவீதம் 10லிருந்து 20% வரை இருப்பதை அனுமதிக்கலாம் என்று சுற்றறிக்கையே
அனுப்பியுள்ளது.
10) ஆகவே குற்றம்சாட்டப்பட்டவரின் வருமானத்திற்கு அதிகமான சொத்தின் சதவீதம் 8.12% சதவீதம் என்பதால் அவர் விடுவிக்கப்படுகின்றார்.
11)
குற்றம்சாட்டப்பட்ட மற்ற மூவருக்கும் இந்த வழக்கில் குறைந்தபட்ச பங்கே
என்பதால் அவர்களும் விடுவிக்கப்படுகின்றனர். என குறிப்பிட்டுள்ளார். மேலும்
குற்றம்சாட்டப்பட்டவர் இந்தியன் வங்கியிடமிருந்து கடன் பெற்றார் என்றும்,
இதனை வருவாயாக நாம் சேர்க்க முடியாது என்றும் சிறப்பு நீதிமன்றம் தனது
தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
எனவே, கடனை வருவாயாகக் கணக்கிடாமல் சிறப்பு நீதிமன்றம் தவறிழைத்தது” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த விஷயமெல்லாம் நீதிபதி குன்ஹா கருத்தில் கொள்ளவில்லையே ஏன்ங்க? நீதியரசர் குன்ஹா செய்தது சரியா? இல்லை நீதியரசர் குமாரசாமி செய்தது சரியா? சரியா செய்தவருக்கு நிம்மதியான தூக்கம் வரும். தவறாக செய்தவருக்கு இரண்டு நாளைக்கு தூக்கம் வராது. எது சரி? எது தவறு? என்று இருவரின் மனசாட்சிக்குத்தான் தெரியும்.
ReplyDeleteகுமாரசாமியின் தீர்ப்பின்படி பார்த்தால் தவறு செய்த குனஹாவை யார் தண்டிப்பது? சட்டத்தை சரியாக அமுல்படுத்த தெரியாதவரை ஏன் நீதிபதியாக வைத்துள்ளீர்கள்? அவர் வேண்டும் என்றே ஜெயலலிதாவை தண்டித்தாரா? அல்லது தெரியாமல் தறிழைத்தாரா? அதை விளக்க வேண்டியவர் அவர்தானே.நீதிபதிகளும் லஞ்சம் வாங்கிக்கொண்டு தவறிழைக்கிறார்கள் என்பது நிருபனமாகியுள்ள உண்மை.எனவே வேண்டுமென்றே தவறிழைத்திருந்தால் உச்ச நீதிமன்றம் அவரை தண்டிக்க வேண்டும். தெரியாமல் தவறிழைத்திருந்தால் பதவிநீக்கம் செய்யவேண்டும். சட்டத்தில் இடம் இல்லை என்று சொல்ல வேண்டாம்.நாம் கடைபிடிப்பது ஆங்கிலேயர்காலத்து சட்டம். சட்டத்தை முதலில் மாற்றுங்கள். இரண்டு நீதிபதிகளையும் வேறொரு உச்ச நீதிமன்ற பென்ச்முன் தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைக்க சொல்லுங்கள்.அவர்கள் தீர்ப்பு சொல்லட்டும்.
ReplyDeleteVery true
ReplyDeleteகூட்டணி அமைத்து திருடினாடர்கள் என்பது உண்மை. ஆனால் வருமானத்துக்கு அதிகமாக 8.12 சதவீதம் தான் திருடியுள்ளார்கள். அதனால் குற்றவாளியை விடுதலை செய்கிறேன். திருட்டில் மற்ற மூவருக்கும் குறைந்தபட்ச பங்கே உள்ளது,ஆதலால் அவர்களையும் விடுதலை செய்கிறேன்.என்ன தீர்ப்பு இது. சமீபத்தில் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.பழைய டயர் திருடிய வழக்கில் குற்றவாளிக்கு 15 நாட்கள் சிறைத்தண்டணை வழங்கப்பட்டுள்ளது.திருடிய பழைய டயரின் மதிப்பு ரூ.10.தீர்ப்பு இரண்டையும் ஒப்பிட்டால் அதன் சாரம் சாமானியன் ரூ 10 திருடியது குற்றம். வலிமைபடைத்தவன் கோடியில் திருடியுள்ளான்.இருப்பினும் அவன் 10 சதவீதத்திற்கு மேல் திருடவில்லை ஆதலால் அவன் நிரபராதி.இதுதான் இந்திய நீதித்துறை.
ReplyDelete