இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பு:
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு, மாணவர்கள், தாங்கள்
பயின்ற பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள், தேர்வு மையங்கள் மூலமும்
விண்ணப்பிக்கலாம்.
*விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே, விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும்.
*விடைத்தாள் நகல் கேட்போர், அதே பாடத்துக்கு, மதிப்பெண் மறுகூட்டலுக்கு
தற்போது விண்ணப்பிக்கக் கூடாது; விடைத்தாள் நகல் பெற்ற பின், அவர்கள்
மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்படும்.
*விடைத்தாள் நகல் பெற, மொழிப்பாடங்களுக்கு தலா, 550 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு தலா, 275 ரூபாய் கட்டணம்.
*மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியலுக்கு தலா, 305 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு, தலா, 205 ரூபாய் கட்டணம்.
இந்த கட்டணத்தை, விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே ரொக்கமாக செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும்
ஒப்புகைச் சீட்டை, தேர்வர்கள் பத்திரமாக வைத்து இருக்க வேண்டும்; அதில்
உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, விடைத்தாள் நகலை இணையதளம் மூலம்
பதிவிறக்கம் செய்யவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் முடியும்.
விடைத்தாள் நகலை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் தேதி மற்றும் இணையதள முகவரி பின் வெளியிடப்படும்.
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கான, சிறப்புத் துணைத் தேர்வு, ஜூன்
இறுதியில் நடக்கும். இதற்கு, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும்,
தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்களிலும், மே 15 முதல் 20ம் தேதி வரை,
தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.
தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு, உரிய தேர்வுக் கட்டணத்தை செலுத்தி,
தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்; இதற்கு தனி விண்ணப்பம் கிடையாது.
பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு பாடத்துக்கும், 50 ரூபாய் தேர்வுக் கட்டணம்; 35
ரூபாய் இதரக் கட்டணத்தை, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ரொக்கமாக செலுத்த
வேண்டும்.
தேர்வுக் கட்டணம் தவிர, பதிவுக் கட்ட ணமாக, 50 ரூபாய் செலுத்த வேண்டும்.இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது.
private candidate tommorow net la result parkka mudiyuma
ReplyDelete