டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 அதிகாரிகளின் நியமனம் செல்லாது என்ற தீர்ப்பில் மாற்றம் கோரி தாக்கல் செய்த
மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் யு.பி.எஸ்.சி. சுப்ரீம்
கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது.
2000-2001-ம் ஆண்டுக்கான காலியிடங்களுக்காக டி.என்.பி.எஸ்.சி. நடத்திய
தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 பேர் அரசு உயர்பதவிகளுக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக
கூறி நடராஜன் என்பவர் 2005-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தார்.
சென்னை ஐகோர்ட்டு 83 பேரும் தேர்ச்சி பெற்றது செல்லாது என்றும், உடனடியாக
அவர்கள் அரசு பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும்
டி.என்.பி.எஸ்.சி. சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம்
கோர்ட்டும் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தது.
ஆய்வு அறிக்கை
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் மாற்றம் கோரி பாதிக்கப்பட்ட அதிகாரிகள்
மற்றும் டி.என்.பி.எஸ்.சி. சார்பாக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில்
83 அதிகாரிகளும் பதவியில் நீடிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால
உத்தரவை பிறப்பித்தது.
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அனில்
ஆர்.தவே மற்றும் தீபக்மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு
வந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி விடைத்தாள்களை ஆய்வு செய்து
யு.பி.எஸ்.சி. அளித்த அறிக்கையின் நகல் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
விதிமுறை மீறல்
தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள்களில் தங்கள் அடையாளங்களை ஜாடையாக
தெரிவிக்கும் வகையில் முயற்சி எதுவும் செய்யவில்லை என்றும், பென்சிலால்
எழுதக்கூடாது என்ற விதிமுறைகளை அவர்கள் மீறியிருக்கிறார்கள் என்றும்
யு.பி.எஸ்.சி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
இதற்கு பிரதிவாதிகளில் ஒருவரான மாதவன் மற்றும் கண்ணன் ஆகியோர் தரப்பில்
ஆஜரான மூத்த வக்கீல்கள் ராஜீவ் தவன், பிரசாந்த் பூஷண் மற்றும்
சுப்பிரமணியம் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் அட்வகேட் கமிஷனர் அறிக்கையின்
அடிப்படையில் சிலரின் நியமனத்தை டி.என்.பி.எஸ்.சி. ரத்து செய்தது.
இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி.யின் விவகாரத்தில் கருத்து கூற
யு.பி.எஸ்.சி.க்கு எந்த அதிகாரமும் இல்லை என்று வாதிட்டனர்.
ஆகஸ்டு 19-ந் தேதி
மேலும் சர்ச்சைக்குரிய விடைத்தாள்கள் அனைத்தும் டி.என்.பி.எஸ்.சி. வசம்
இருந்ததால் அவர்கள் அந்த ஆவணங்களில் தங்களுக்கு சாதகமாக திருத்தங்கள்
மேற்கொண்டிருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வாதிட்ட மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம்,
விடைத்தாள்களில் அப்படி முறைகேடுகள் எதுவும் மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என
வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் யு.பி.எஸ்.சி. அறிக்கையின்
நகலை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், அந்த அறிக்கை குறித்து
ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 4 வாரங்களுக்குள் எழுத்துபூர்வமாக தாக்கல்
செய்யுமாறும் உத்தரவிட்டனர். விசாரணையை ஆகஸ்டு 19-ந் தேதிக்கு
ஒத்திவைத்தனர்.
kasu irruppavarukku oru nayam
ReplyDeletekasu ellathavarukku oru nayam
solkerathu entha arasu
ellam andavar irrukkar ..........................
83 poolunka tnpsc officerku ethanana samana kaati vela vanginangalo....
ReplyDelete