கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி - மார்ச்)
நாட்டின்பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த
வளர்ச்சி விகிதமானது சீனாவை விட அதிகமாகும். இதையடுத்து உலக அளவில்
அதிவேகமாக பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடாக இந்தியா
உருவெடுத்துள்ளது. கடந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம், முதல்
காலாண்டில் 6.7 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டில் 8.4 சதவீதமாகவும்,
மூன்றாவது காலாண்டில் 6.6 சதவீதமாகவும் இருந்தது.
இந்நிலையில் கடந்த ஜனவரி
மாதம் முதல் மார்ச் மாதம் வரை, அதாவது கடந்த நிதியாண்டின் நான்காவது
காலாண்டில் நாட்டின் பொருளாதார விகிதம் வேகமாக உயர்ந்துள்ளது. 2013-14 ஆம்
நிதியாண்டின் நான்காவது காலண்டில், 6.6 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம்,
கடந்த நிதியாண்டின் அதே பருவத்தில் 7.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதே காலகட்டத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி
விகிதம் 7.4 சதவீதமாகும். அதேபோல, நாட்டின் பொருள் உற்பத்தித் துறை
வளர்ச்சி விகிதம் 8.4 சதவீதமாகவும், வர்த்தகம், போக்குவரத்து உள்ளிட்ட
சேவைத் துறைகளின் வளர்ச்சி விகிதம் 14.1 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், "இந்தியப் பொருளாதாரம் சீரடைந்து வருவதற்கான பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர முடிகிறது; உற்பத்தி-சேவைத் துறைகளில் 8 முதல் 9 சதவீதம் வரை மேலும் வளர்ச்சி பெறுவதற்கான தகுதி நம்மிடம் உள்ளது' என்றார். நாட்டின் பணவீக்கம்குறைந்து வரும் நிலையில், வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கும் என்று நம்புவதாக தொழில் வர்த்தக சபைகள் தெரிவித்துள்ளன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...