Home »
» தமிழகத்தில் 5 ஆயிரம் புதிய பள்ளிகள்??
தொடக்கக்
கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் கடந்த 10 ஆண்டுகளில் 4.1 சதவீதமாக
அதிகரித்துள்ளது.கடந்த 2005-06-ஆம் ஆண்டில் இருந்து 2013-14-ஆம் ஆண்டு
வரைதொடக்கக் கல்வி தொடர்பாக மாவட்ட கல்வித் தகவல் முறையில்
சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை தேசிய கல்வித் திட்டமிடல், நிர்வாகப்
பல்கலைக்கழகம்(சமஉடஅ) ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அந்த
முடிவுகளின் விவரம்:அதில் கடந்த 2005-06-ஆம் ஆண்டில் தொடக்கக் கல்வியில் 2
சதவீதமாக இருந்த மாணவர்களின் இடைநிற்றல் 2013-14-ஆம் ஆண்டில் 4 சதவீதமாக
அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல, 1 முதல் 5-ஆம் வகுப்பு
வரையிலான தொடக்கக் கல்வியில் இருந்து 6-ஆம் வகுப்பு உள்ளிட்ட
வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 95.4 சதவீதமாக
உள்ளது.ஆசிரியர் மாணவர் விகிதம் குறைவு: கடந்த 2005-06-ஆம் ஆண்டில்,
தொடக்கக் கல்வித் துறையில் 3 லட்சத்து 31,513 ஆக இருந்த ஆசிரியர்களின்
எண்ணிக்கை 2013-14-ஆம் ஆண்டில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 788 ஆக
அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஆசிரியர் மாணவர் விகிதம்1:29 என்பதில்
இருந்து 1:18 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. அதாவது 18 மாணவர்களுக்கு ஒரு
ஆசிரியர் என்ற அளவில் இது குறைந்துள்ளது.
தமிழகத்தில் 5 ஆயிரம் புதிய பள்ளிகள்:
தமிழகத்தில்
உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 2006-07-ஆம் ஆண்டில் 51,574-என்பதில் இருந்து
2013-14-ஆம் ஆண்டில் 56,784-ஆக அதிகரித்துள்ளது. அதாவது, இந்த ஆண்டுகளில்
தமிழகத்தில் புதிய பள்ளிகளின் எண்ணிக்கை 5 ஆயிரம் அதிகரித்துள்ளது.இதில்,
அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 67 சதவீதத்தில் இருந்து 65.2 சதவீதமாகக்
குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 33 சதவீதத்தில் இருந்து 34.8
சதவீதமாக அதிகரித்துள்ளது.
i think government schools up graded for this reason 67% reduces to 66.2% that means up graded schools are calculated under defficiency
ReplyDelete