Home »
» டி.வி.யில் செய்தி வாசித்த பார்வையற்ற 5-ஆம் வகுப்பு சிறுவன்
கோவையில் இருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சியில் பார்வையற்ற சிறுவன் பிரெய்லி முறையில் வெள்ளிக்கிழமை செய்தி வாசித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழநியை அடுத்த பாறைப்பட்டியைச்
சேர்ந்த திருநாவுக்கரசுவின் மகன் ஸ்ரீ ராமானுஜம்(10). இவர்
தொண்டாமுத்தூரில் உள்ள பார்வையற்றோர் தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு
படித்து வருகிறார். இந்நிலையில், செய்தி வாசிப்பு தொடர்பாக ஸ்ரீ
ராமானுஜத்துக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்தத் தனியார்
தொலைக்காட்சி ஊழியர்கள் கடந்த 4 மாதங்களாக பயிற்சியளித்து வந்தனர். மே
தினத்தையொட்டி, அந்தத் தொலைக்காட்சியில் ஸ்ரீ ராமானுஜம் செய்தி வாசித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...