அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வுக்கு
இதுவரை 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுக்கு
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி மே 6 ஆகும். அடுத்த மூன்று நாள்களில்
விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தொடுவதற்கு வாய்ப்புள்ளதாக
அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 4,362 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு மே 31-ஆம் தேதி போட்டித் தேர்வு நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்கு ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிறப்பு மையங்களில் ஆன்-லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 10 நாள்களில் 4.80 லட்சம் பேர் இந்தப் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.
பத்தாம் வகுப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ், உயர் கல்வித் தகுதிச் சான்றிதழ், பணி முன் அனுபவச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களின் அசல், நகல்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்தப் பணி நியமனம் ஒவ்வொரு மாவட்ட அளவிலும் நடைபெறுகிறது. போட்டித் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் இருந்து 1:5 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உள்ளிட்டோர் நேர்முகத் தேர்வு நடத்தும் குழுவில் இடம்பெற்றிருப்பர்.
நேர்முகத் தேர்வு மொத்தம் 25 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு பணி நியமனம் வழங்கப்படும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...