Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

4339 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நேரடி நியமான மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு.


        மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நேரடி நியமான மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 10மொத்த காலியிடங்கள்: 4339
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
அதிகாரிகள் மற்றும் ஆசிரியரல்லாத பணிகள்: 585
1. துணை முதல்வர் - 30
2. நிதி அலுவலர் - 01
3. உதவியாளர் - 75
4. கிளார்க் (UDC)- 153
5. லோயர் டிவிஷன் கிளார்க் (LDC) - 312
6. இந்தி மொழிபெயர்ப்பாளர் - 05
7. சுருக்கெழுத்தர் கிரோடு-II - 08
8. உதவி ஆசிரியர் - 01

ஆசிரியர் பணி மற்றும் காலியிடங்கள்: 3754
I . முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT) (குரூப் பி பணி) - 387
1. ஆங்கிலம் - 45
2. இந்தி - 20
3. இயற்பியல் - 38
4. வேதியியல் - 30
5. பொருளாதாரம் - 32
6. வணிகவியல் - 68
7. கணிதம் - 28
8. உயிரியல் - 36
9. வரலாறு - 30
10. புவியியல் - 21
11. கம்ப்யூட்டர் சயின்ஸ் - 39

II. பயிற்சி பட்டதாரி ஆசிரியர்கள் (TGT) (குரூப் பி பணி) - 654
1. ஆங்கிலம் - 72
2. இந்தி - 67
3. சமூக கற்கைகள் - 59
4. அறிவியல் - 61
5. சமஸ்கிருதம் - 62
6. கணிதம் - 70
7. P&HE - 117
8. AE - 60
9. WE - 86

III. இதர கற்பித்தல் பணியிலிருந்து (குரூப் பி பணி) - 74
1. நூலகர் - 74

IV. முதன்மை ஆசிரியர் மற்றும் மாற்ற அழைப்பு விடுத்தது (இசை) (குரூப் பி பணி)- 2639
1. ஆரம்ப பள்ளி ஆசிரியர் - 2566
2. PRT (இசை) - 73

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செயல்திறன் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
1. துணை முதல்வர் மற்றும் நிதி அலுவலர் பணிக்கு ரூ.1,200
2. மற்ற அனைத்து பணிகளுக்கு ரூ.750
விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் கேந்திரிய வித்யாலயாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.06.2015
மேலும் பணிவாரியான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://kvsangathan.nic.in/EmploymentDocuments/EMP-NTC-18-05-15.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.




1 Comments:

  1. Hindi padingappa.... Nammala kuti suvar aakittanga...Hindi compulsory paadamaakanum...political party muzhu poruppu...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive