விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு 41556 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அதற்கான தேர்வு
நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை மேலும் அவர் கூறியாதவது: இம்மாவட்டத்தில்
பள்ளிகளில் காலியாக உள்ள 154 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் உள்ளன.
இப்பணிக்கு குறைந்தபட்சம் பள்ளி இறுதி வகுப்பு அல்லது அதற்கு சமமான
கல்வியில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் தேர்வதற்கான தகுதியை பெற்றிருக்க
வேண்டும். கடந்த 24-ம் தேதி முதல், தொடர்ந்து மே 6-ம் தேதி வரையில்
விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் மொத்தம் 41556 பேர்
விண்ணப்பித்துள்ளனர்.
இம்மாதம் 31-ம் தேதி இப்பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு 74 மையங்களில்
நடைபெற இருக்கிறது. இதில், 150 மதிப்பெண்களுக்கேற்ப 120 அறிவியல்
வினாக்களும், 30 பொது அறிவு வினாக்களும் கேட்கப்படும்.
மேலும், நேர்முகத் தேர்வில் கூடுதல் தகுதிக்கு பிளஸ்2-2, பட்டம்
பெற்றிருந்தால்-5, சரியான முறையில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு-10,
அனுபவம் பெற்றிருந்தால்-2, நேர்முகத் தேர்வில் அதிகாரிகள் குழு முன்
அளிக்கும் பதில்களுக்கு-6 என மொத்தம் 25 மதிப்பெண்களும் அளிக்கப்பட
இருக்கிறது. இப்பணியிடம் அனைத்தும் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வில்
பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் நியமனம் செய்யப்பட
இருப்பதாக அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...