தொடக்கக் கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் கடந்த 10 ஆண்டுகளில் 4.1
சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2005-06-ஆம் ஆண்டில் இருந்து 2013-14-ஆம்
ஆண்டு வரை தொடக்கக் கல்வி தொடர்பாக மாவட்ட கல்வித் தகவல் முறையில்
சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை தேசிய கல்வித் திட்டமிடல், நிர்வாகப்
பல்கலைக்கழகம் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில் கடந்த 2005-06-ஆம் ஆண்டில் தொடக்கக் கல்வியில் 2 சதவீதமாக இருந்த
மாணவர்களின் இடைநிற்றல் 2013-14-ஆம் ஆண்டில் 4 சதவீதமாக அதிகரித்துள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வியில் இருந்து 6-ஆம்
வகுப்பு உள்ளிட்ட வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 95.4
சதவீதமாக உள்ளது.
ஆசிரியர் மாணவர் விகிதம் குறைவு: கடந்த 2005-06-ஆம் ஆண்டில், தொடக்கக்
கல்வித் துறையில் 3 லட்சத்து 31,513 ஆக இருந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை
2013-14-ஆம் ஆண்டில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 788 ஆக அதிகரித்துள்ளது. இதன்
காரணமாக, ஆசிரியர் மாணவர் விகிதம் 1:29 என்பதில் இருந்து 1:18 என்ற
அளவுக்குக் குறைந்துள்ளது. அதாவது 18 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற
அளவில் இது குறைந்துள்ளது.
தமிழகத்தில் 5 ஆயிரம் புதிய பள்ளிகள்: தமிழகத்தில் உள்ள பள்ளிகளின்
எண்ணிக்கை 2006-07-ஆம் ஆண்டில் 51,574-என்பதில் இருந்து 2013-14-ஆம்
ஆண்டில் 56,784-ஆக அதிகரித்துள்ளது. அதாவது, இந்த ஆண்டுகளில் தமிழகத்தில்
புதிய பள்ளிகளின் எண்ணிக்கை 5 ஆயிரம் அதிகரித்துள்ளது.
இதில், அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 67 சதவீதத்தில் இருந்து 65.2
சதவீதமாகக் குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 33 சதவீதத்தில்
இருந்து 34.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...