ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையம் உள்ளிட்ட இஸ்ரோவின் மூன்று மிகப்பெரிய மையங்களுக்கு புதிய இயக்குனர்கள் நாளை பொறுப்பேற்க உள்ளனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள திரவ இயக்க திட்ட மைய இயக்குனர் கே.சிவன், திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக பதவியேற்க உள்ளார். இந்த மையத்தின் இயக்குனராக இருக்கும் சந்திரதாதன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் திட்ட இயக்குனராக உள்ள எஸ்.சோமநாத், திரவ இயக்க திட்ட மைய இயக்குனராக பொறுப்பேற்கிறார்.
இதேபோல் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய துணை இயக்குனர் பி.குன்ஹிகிருஷ்ணன் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் சவான் விண்வெளி மையத்தின் இயக்குனராக பொறுப்பேற்க உள்ளார். ஏற்கனவே இயக்குனராக உள்ள டாக்டர் எம்.ஒய்.எஸ்.பிரசாத் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இத்தகவலை இஸ்ரோ தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...