ஒவ்வொரு ஆண்டும் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்போது மாணவிகளே அதிக தேர்ச்சி விகிதம், மதிப்பெண்பெற்றதாக செய்திகள் வெளியாவது தொடர்கதையாகி விட்டது.
இதனால் அறிவாற்றலில் மாணவர்கள் சற்று பின்தங்கியவர்கள் போல மீடியாக்களும்,
பொதுமக்களும் பார்க்கின்றனர்.
இதற்கான காரணங்கள் குறித்து சீனா, ஸ்காட்லாந்து, இலங்கை, சிங்கப்பூர்
உள்ளிட்ட நாடுகளுக் குச் சென்று அங்குள்ள கல்விமுறை களைப் பற்றி ஆய்வு
மேற்கொண்ட திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராமம் பல்கலைக்கழக கல்வித் துறை
பேராசிரியர் முனைவர் ஜாகிதா பேகம் `தி இந்து’விடம் கூறியதாவது:
‘‘PET மற்றும் FMRT தொழில் நுட்பத்தால் ஆண்கள் மற்றும் பெண்களின் மூளைகளில்
உள்ள வேறுபாடுகளை தற்போது அறிய முடிகிறது. இதன்மூலம், மூளையின்
அமைப்பிலும், செயல்பாட்டிலும் பெண்களிடம் இருந்து ஆண்கள் கற்றலில்
வேறுபடுகிறார்கள் என்பது தெரிகிறது. வலதுபுறம் மற்றும் இடதுபுற மூளைகளை
இணைக்கும் கார்பஸ் கலோசம் (corpus callosum) எனும் பகுதி ஆண்களைவிட
பெண்களுக்கு பெரிதாக உள்ளது. அதனால், பெண்களுக்கு அதிக நினைவாற்றல்,
கவனிக்கும் திறன், விரிவாக, அழகாக எழுதும் திறன் அதிகம்.
தற்போதைய நவீன கல்வி முறையில் அதிகப்படியான பாடப் பகுதிகளை மனப்பாடம்
செய்தல், தேர்வுகளில் அவற்றை எழுதுதல் அளவுக்கு அதிகமாக உள்ளது. கவனம்
சிதறாமல், இந்த நடை முறையை பின்பற்றுவது மாணவர் களுக்கு கடினமாக உள்ளது.
பெண் கள் தங்கள் மூளையில் உள்ள அதிகப்படியான கார்டெக்ஸ் பகுதி களை மொழி
சார்ந்த, உணர்வுப் பூர்வமான வேலைகளுக்கு பயன் படுத்துகிறார்கள்.
ஆனால், ஆண்களோ இயக்கம், இயந்திரங்கள் மற்றும் இடங் கள் சார்ந்த வேலைகளுக்கு
பயன் படுத்துகிறார்கள். அதனால், மாண வர்களுக்கு கணிதம், இயற்பியல்,
இண்டஸ்ட்ரியல், இன்ஜினீயரிங், ஆர்க்கிடெக்சர் போன்ற பாடப் பிரிவுகளில் அதிக
நாட்டம் உள் ளது. மொழிசார்ந்த பாடங்களை மனப்பாடம் செய்வதைக் காட்டிலும்,
செய்முறை பயிற்சியாக கற்கும் பாடங்களே மாணவர்களுக்கு விருப்பமாக உள்ளது.
`கற்பித்தல்’ என்ற பெயரில் அதிகப்படியான பாடப்பகுதிகளை ஆசிரியர்கள் உரக்கச்
சொல்லும் போது, மாணவர்களால் அசையா மல் அமர்ந்து அவற்றைக் கவனிப் பது
சிரமமாக உள்ளது. ஆனால், மாணவிகள் தங்களுடைய அதிகப் படியான கார்டெக்ஸ்
பகுதிகளை மொழி சார்ந்த வேலைகளுக்கு (listening, speaking, reading,
writing) பயன்படுத்துவதால், அவர்களுக்கு இவை எளிதாகின்றன.
பெண்களை விட ஆண்களுக்கு செரோடோனின் ஆக்சிடோசின் என்ற ரசாயனங்கள் சுரப்பது
குறைவு. இதனால், பெண் களைவிட ஆண்களால் அதிக நேரம் ஒரே இடத்தில்
வகுப்பறைகளில் அசையாமல் அமர்வது கடினமான காரியம். ஆண்களின் மூளை அவ்வப்போது
ஓய்வுநிலைக்குச் சென்று புதுப்பித்துக் கொள்ளக் கூடியதாகும்.
அதனால், வகுப்பறைகளில் கடைசி பெஞ்சுகளில் அமர்ந்திருப் பது, எழுத்துப்
பணிகளில் நாட்ட மில்லாமல் இருப்பது, புராஜெக்ட், அசைன்மென்ட்களை விரைவில்
முடிக்காமல் இருப்பது, வகுப்பறை களில் விரிவுரையின்போது தூங்கு வது,
விழிப்பு நிலையில் இருப்ப தற்காக பென்சில், பேனா போன்றவற்றை
தட்டிக்கொண்டிருப் பது போன்றவை மாணவர்களிடம் அதிகம் காணப்படும்.
அதே நேரத்தில், சோர்வைத் தரும் வகுப்புகளிலும் தூங்காமல் இருப்பது,
குறிப்பு எடுப்பது என விழிப்புடன் இருப்பதால் மாணவிகளின் மூளை அடிக்கடி
ஓய்வு நிலைக்கு செல்வதில்லை. அதனால், இப்போதைய கல்வி முறை மாணவர்களைவிட
மாணவி களின் மூளைக்கு சாதகமாக உள்ளது.
மதிப்பெண்கள், மனப்பாட முறை, அதிகப்படியான தேர்வு கள், ஒரே மாதிரியான
ஆசிரியர் களின் விரிவுரை, அணுகுமுறை போன்றவை மாணவர்களை சலிப் படைய
செய்கிறது. தற்போதைய பாடத்திட்டம், ஒரே இடத்தில் மணிக் கணக்கில் கவனிக்கும்
உத்வேக மற்ற வகுப்பறைகள் போன் றவை, மாணவர்களைவிட மாணவி களுக்கு சாதகமான
முறையில் அமைந்துள்ளதால் மாணவர்கள் படிப்பில் பின்தங்கியநிலையில் இருப்பது
போன்ற `கானல் நீர்’ தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதைப் போக்க கலைப் பாடத்
திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
பள்ளிகள், ஆசிரியர்களின் செயல்பாடுகள் மாணவ, மாணவி களின் நுண்ணறிவை
வெளிப்படுத்த வேண்டும். அதற்கு முதற்கட்டமாக பி.எட்., எம்.எட். உள்ளிட்ட
கலைத் திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வந்து மாணவர்களுடைய கற்றல் திறனை
மேம்படுத்த வேண்டியது அவசியம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பெற்றோர்களின் அணுகுமுறையும் ஒரு காரணமே தவிர,
படிப்பில் பின்தங்குவதற்கு மாணவர்களை மட்டும் குறைசொல்வதால் எந்தப் பயனும்
இல்லை’’ என்றார்.
பெண்கள் தங்கள் மூளையில் உள்ள அதிகப்படியான கார்டெக்ஸ் பகுதிகளை மொழி
சார்ந்த, உணர்வுப் பூர்வமான வேலைகளுக்கு பயன்படுத்துகிறார்கள்.
மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், இண்டஸ்ட்ரியல், இன்ஜினீயரிங்,
ஆர்க்கிடெக்சர் போன்ற பாடப் பிரிவுகளில் அதிக நாட்டம் உள்ளது. மொழிசார்ந்த
பாடங்களை மனப்பாடம் செய்வதைக் காட்டிலும், செய்முறை பயிற்சியாக கற்கும்
பாடங்களே மாணவர்களுக்கு விருப்பமாக உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...