Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ்–2 தேர்வு முடிவு: மனஅழுத்தத்தால் தவித்த மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர்கள்

          தேர்வு நேரங்களில் மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்கும் அருமருந்தாக 104 உதவி மையம் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல துறையின் கீழ் இயங்கி வரும் இந்த உதவி மையம் பல்வேறு வழிகளில் உதவிகரமாக இருக்கிறது. மற்ற நேரங்களில் மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் இந்த மையம், தேர்வு நேரத்தில் முழுக்க முழுக்க மாணவர்களின் மனதில் இருக்கும் வலியை போக்குவதற்கு பயன்படுகிறது.
 
தேர்வு நேரங்களில் 3 கட்டங்களாக உளவியில் பயிற்சி கொடுக்கப்படுகிறது. முழுக்க முழுக்க போனிலேயே மாணவர்கள் ஆலோசனை பெறுகிறார்கள். தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி என்று விரிவாக விளக்கம் அளிக்கப்படுகிறது.
தேர்வு நேரங்களில் வயிறு உபாதைகளை ஏற்படுத்தக்கூடிய உணவு வகைகளை சாப்பிடக்கூடாது, படிப்பதற்கு நேரம் ஒதுக்கும் அதே நேரத்தில் நன்றாக தூங்குவதற்கும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பதட்டமில்லாமல் பரீட்சை எழுத முடியும் என்கிற ஆலோசனை முதலில் வழங்கப்படுகிறது.
தேர்வு நேரத்தில் மாணவர்கள் பலர் குறிப்பிட்ட பாடத்தின் பெயரை சொல்லி, இந்த தேர்வை நான் சரியாக எழுதவில்லை. அதனால் மனசுக்கு சங்கடமாக உள்ளது என்று போன் செய்து ஆலோசனை கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு 104 உதவி மையத்தினர், இந்த முறை விட்டதை அடுத்த தேர்வில் பிடித்துவிடலாம். கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் கூறியுள்ளனர். தேர்வு முடிவு வருவதற்கு முன்னும் பின்னும் 3–ம் கட்ட ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. தேர்வு முடிவுகள் எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மனம் தளரக்கூடாது.
இன்று அனைத்து துறைகளிலுமே வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. எனவே மதிப்பெண்கள் குறைவாக இருப்பதை பார்த்து அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்வு நேரங்களில் 6 ஆயிரம் அழைப்புகளில் இருந்து 8 ஆயிரம் அழைப்புகள் வரை 104 மையத்துக்கு வருகின்றன. நேற்று ஒரே நாளில் 6 ஆயிரம் பேர் போன் செய்துள்ளனர். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே ஆலோசனை கேட்டு வந்த நிலையில் ஆசிரியர்களும் மாணவர்களின் நலனின் அக்கறையுடன் கொண்டு 104–க்கு போன் செய்கிறார்கள்.
இந்த ஆண்டு 20–க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் 104–க்கு போன் செய்து, சார், எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன், மதிப்பெண் குறைவாக வந்து விடுமோ... அல்லது தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்று கவலையுடன் இருக்கிறான். அவனுடன் ஆறுதலாக 4 வார்த்தை பேசுங்கள் என்று போன் போட்டு கொடுத்துள்ளனர். மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையில், இது போன்ற மாற்றங்கள் நிச்சயம் வரவேற்கத்தக்கவையே.
போனில் வழங்கப்படும் இது போன்ற ஆலோசனைகளை மாணவர்களை ஒருங்கிணைத்து கூட்டாக அளிக்கலாமே என்று 104 உதவி மைய ஒருங்கிணைப்பாளர் பிரபுதாசிடம் கேட்டோம். இதற்கு பதில் அளித்த அவர், மொத்தமாக மாணவர்களை அமர வைத்து இதுபோன்ற ஆலோசனைகளை கூறினால் பெரும்பாலான மாணவர்களின் கவனம் சிதறுவதற்கே வாய்ப்புகள் உள்ளன. தனியாக போனில் பேசும் போதுதான் மனம் விட்டு பேச முடியும் என்று முத்தாய்ப்பாக கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive