"நாமும் வாழ்த்துக்கள் சொல்வோம்!"
அன்று பெரம்பலூர் கலெக்டர் அவர்களால் போட்ட விதை இன்று மாநில அளவில் 2 ம் இடம் பிடித்து முன்னோடி மாவட்டமாக அசதி இருக்கிறது
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை வளர்த்தெடுக்க திட்டமிட்ட
தாரேஸ் அகமது, சூப்பர் 30 எனும் திட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும்
மிகசிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி
ஆசிரியர்களைக் கொண்டு அந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் படித்த மாணவர்கள், தற்போது மருத்துவக்கல்லூரி, அண்ணா
பல்கலைகழகங்களில் படித்து வருகிறார்கள்.
இந்த சாதனைக்கு மக்களிடம் உண்டான வரவேற்பை அடுத்து
சூப்பர் 30 திட்டத்தில், தற்போது 300க்கும் மேற்பட்ட மாணவர்கள்
பயில்கிறாரகள். அலட்சியமாக வேலை செய்யும் அரசு ஆசிரியர்களை அலர்ட் செய்ய
வைத்திருக்கிறார் ஆட்சியர் தாரேஸ் அகமது. இதனால் பெரம்பலூரின் அரசுப்
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம், ஒவ்வொரு வருடமும் 26 சதம் வரை
அதிகரித்துள்ளது என்கிறார்கள் கல்வி அதிகாரிகள்,
பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்க சிகரம் எனும்
திட்டத்தையும் அரசு பள்ளிகளில் செயல்படுத்தும் இவர், பெரம்பலூர்
மாவட்டத்தில் எங்கே சென்றாலும் ஒரு பள்ளியின் ஒட்டு மொத்தச் செயல்பாட்டை
தெரியப்படுத்த பச்சை, மஞ்சள், சிவப்பு உள்ளிட்ட ஆறு நிறங்களில் பள்ளியின்
செயல்பாட்டை வேறுபடுத்தி காட்டுகிறார். சில பள்ளிகளில் ஆய்வு செய்யுபோது
இவரே பிள்ளைகளுக்கு பாடம் நடத்தி சோதனை செய்யும் சம்பவங்களும், குழந்தைகளை
அங்கன்வாடிகளில் சேர்க்க வேண்டும், அப்போதுதான் பிள்ளைகள் ஆரோக்கியமாக
வளரும் என தான் சந்திப்பவர்களுக்கு பாடம் எடுக்கும் சம்பவமும் பாராட்டை
பெற்று வருகிறது.
இதுமட்டுமல்லாமல், மாவட்டத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கான
கல்விக்கடன் முகாம் முறையாக நடத்தி, மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைக்கும்
வரை கண்காணிக்க ஒரு குழு அமைத்திருக்கிறார். இந்த சீரிய முயற்சியில் இதுவரை
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உயர்கல்வி பயிலும் மாணவர்கள்
பலனடைந்துள்ளார்கள் என புள்ளி விபரங்களை அடுக்குகிறார்கள்.
மாவட்டத்தில் போடப்பட்ட சத்துணவு பணியாளர்கள் தேர்வில் பணம் கொடுக்கவோ,
வாங்கவோ கூடாது என முறையாக தேர்வு நடத்திய மாவட்ட ஆட்சியர்களில் தாரேஸ்
அகமதுவும் ஒருவர்.
பெண் குழந்தைகளின் கல்வி
கடந்த நான்கு வருடத்திற்கு முன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக
பொறுப்பேற்றதிலிருந்து, இன்று வரை துளியளவும் ஆர்வம் குறையாமல், எளிமையான
அணுகுமுறையால் மக்களிடம் நல்ல பெயர் எடுத்துள்ள இவர், கிராமங்களிலும்
சர்வசாதாரணமாக வலம் வருகின்றார்.
இவர் தலைமையிலான சமூக நலத்துறை அலுவலர் குழு, இதுவரை 450க்கும் மேற்பட்ட
குழந்தை திருமணங்களை தடுத்துள்ளது. இதில் ஒரு மதத்தைச் சேர்ந்த திருமணத்தை
தடுத்ததற்காக தாரேஸ் அகமதுக்கு எதிராக தமிழகம் முழுக்க போராட்டம்
நடத்தினர். அப்போதும் கூட, பெண் குழந்தை என்றால் எல்லா குழந்தைகளும்
ஒன்றுதான். திருமண வயதை அடைந்த பிள்ளைகளுக்கு மட்டுமே திருமணம் செய்ய
அனுமதி என மிக கடுமையாக நடந்து கொண்டார்.
குழந்தை திருமணங்களை தடுத்த கையோடு பெண் பிள்ளைகளை அழைத்து, அவர்களுக்காக
சிறப்பு தங்கும் இடங்களை ஏற்படுத்தி, படிக்க ஏற்பாடுகள் செய்தார். இதில்
சில பெண் குழந்தைகள் இப்போது பொறியியல் உள்ளிட்ட கல்லூரியில் சேர்ந்து
கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்திலேயே முதன் முதலில் பெண்
குழந்தைகளை பாதுகாப்போம் எனும் வாசகங்களை ஓங்கி ஒலித்தபடி
பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டத்தை நடத்தியதோடு அந்த
போட்டிகளில் இவரும் கலந்துகொண்டு ஓடியதை பெருமையாக சொல்கிறாரகள் இளைஞர்கள்.
வாழ்த்துக்கள் அய்யா...
ReplyDeletevery nice
ReplyDeletei like this news and thank you for your service
ReplyDeleteVery good effort ! keep it up!
ReplyDeleteVery nice
ReplyDelete