இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய முக்கியப் பாடங்களைத்
தொடர்ந்து, கணினி அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களுக்கான பிளஸ் 2 விடைத்தாள்
நகல்களையும் வெள்ளிக்கிழமை (மே 29) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத்
தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 1 லட்சத்து 9 ஆயிரம்
மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், முதல்கட்டமாக முக்கியப்
பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களை ள்ஸ்ரீஹய்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற
இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இப்போது மீதமுள்ள மொழிப்பாடம், வரலாறு, கணினி அறிவியல் போன்ற பிற
பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களையும் அதே இணையதளத்தில் பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்த பிறகு, விடைத்தாள் மறுகூட்டல்,
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், ள்ஸ்ரீஹய்.ற்ய்க்ஞ்ங்.ண்ய்
என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஜூன் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். மேலும்,
விபரங்களுக்கு 8012594109, 8012594119 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...