விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில்
ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி 18-ம் தேதி நடைபெற இருப்பதாக
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: இம்மாவட்டத்தில் 75
தேர்வு மையங்களில் 192 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 22,306 பேர் தேர்வு
எழுதினர். இதில், 21737 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டைவிட,
1.34 சதவீதம் கூடுதலாகும்.
மேலும், மாநில அளவில் கடந்த ஆண்டு இழந்த
முதலிடத்தையும் பெற்றுள்ளது. இந்நிலையில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள்,
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆகியோருக்கான
பாராட்டு விழா ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமையில் சிவகாசி அருகே உள்ள
பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி வளாகத்தில் மேற்குறிப்பிட்ட நாளில் நடைபெற
இருக்கிறது.
இவ்விழாவில் மாவட்ட அளவிலும், ஒவ்வொரு பள்ளி
அளவிலும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்
மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்படுகிறது.
அதேபோல், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 99 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் கேடயம் அளிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...