பிளஸ்
2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, மாணவ, மாணவியர், நேரடியாக
பதிவிறக்கம் செய்யும் வசதி, இன்று முதல் அறிமுகமாகிறது. பிளஸ் 2 தேர்வு
முடிவுகள், கடந்த 7ம் தேதி வெளியானது. இந்த ஆண்டு தேர்வு முடித்தோருக்கு,
நேரடியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்காமல், முதற்கட்டமாக கல்லூரிகளைப்
போன்று, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகமாகி உள்ளது. இந்த சான்றிதழ்,
மே 7ம் தேதி முதல், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பதிவிறக்கம்
செய்யப்பட்டு, மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டன.
இந்நிலையில்,
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, மாணவ, மாணவியர் நேரடியாக பதிவிறக்கம்
செய்து கொள்ளும் வசதி, இன்று முதல் அமலுக்கு வருகிறது. மாணவ, மாணவியர், http://www.dge.tn.nic.in/ என்ற
இணையதளத்தில், தங்கள் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விவரத்தைப்
பதிவு செய்து, சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். நிரந்தர மதிப்பெண்
சான்றிதழ், மறுமதிப்பீடுக்கு பின் கிடைக்கும் என, கல்வித் துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...