தமிழகத்தின்
கோவை, ஈரோடு
உள்பட நாட்டின்
29 நகரங்களில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு
உயர்த்தப்பட்ட வீட்டு வாடகைப் படியையும், போக்குவரத்துப்
படியையும் வழங்குவதற்கு, மத்திய அமைச்சரவை
ஒப்புதல் வழங்கியது.
இதுதொடர்பாக மத்திய தகவல்
தொடர்புத் துறை
அமைச்சர் ரவிசங்கர்
பிரசாத், தில்லியில்
செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கு
உயர்த்தப்பட்ட வீட்டு வாடகைப் படியையும், போக்குவரத்துப்
படியையும் வழங்குவதற்காக,
2011-ஆம் ஆண்டு
மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சில நகரங்களை மறுசீரமைப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் மத்திய
அமைச்சரவை ஒப்புதல்
வழங்கியது. இந்த மறுசீரமைப்பானது 2014-ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம்
1-ஆம் தேதி
முதல் அமலுக்கு
வருகிறது. இதன்
காரணமாக, 2014-15 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.
128 கோடி கூடுதல்
செலவு ஏற்படும்
என்றார் ரவிசங்கர்
பிரசாத். வீட்டு
வாடகைப் படியைப்
பொறுத்தவரை புணே, ஆமதாபாத் ஆகிய 2 நகரங்கள்
ஒய் - பிரிவிலிருந்து,
எக்ஸ் - பிரிவுக்கு
மேம்படுத்தப்பட்டுள்ளன.
ஈரோடு, நெல்லூர், குர்கான்,
குல்பர்கா, திருச்சூர், மலப்புரம், கண்ணூர், கொல்லம்,
நொய்டா, சிலிகுரி
உள்ளிட்ட 21 நகரங்கள் இசட் - பிரிவில் இருந்து
ஒய் - பிரிவுக்கு
மேம்படுத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்துப் படியைப் பொறுத்தவரை
கோவை, பாட்னா,
கொச்சி, இந்தூர்,
காஜியாபாத் ஆகிய நகரங்கள் பிற இடங்கள்
என்ற பிரிவில்
இருந்து முன்னேறிய
பகுதிகள் பிரிவுக்கு
மேம்படுத்தப்பட்டுள்ளன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...