அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர்
சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:பாரத ஸ்டேட் வங்கியின் குழும வங்கிகளான
ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு உள்ளிட்ட
வங்கிகளை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஊழியர்கள் சங்கத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் முயற்சியில் வங்கி நிர்வாகம்
ஈடுபட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வங்கிகளில் காலியிடங்களை நிரப்ப வேண்டும்,
ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் வரம்பை அதிகரிக்க வேண் டும் என்பன உள்ளிட்ட
கோரிக்கை களை வலியுறுத்தி ஜூன் 24-ம் தேதி நாடு தழுவிய அளவில்
வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...