Home »
» பிளஸ் 2 தேர்வு முடிவால் வருத்தம்: ஒரே நாளில் 6 ஆயிரம் பேருக்கு ‘104’ சேவை மூலம் ஆலோசனை
பிளஸ் 2 தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது, மதிப்பெண் குறைந்தது போன்ற காரணங்களால் சங்கடமாக உணர்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர் என 6
ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நேற்று ‘104’ சேவை மையத்துக்கு தொடர்பு
கொண்டு ஆலோசனை பெற்றனர்.
பிளஸ் 2 தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தது மற்றும் மதிப்பெண் குறைந்தது
போன்ற காரணங்களால் சில மாணவ, மாணவிகள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். இதை
தடுக்க மாணவ, மாணவிகளுக்கு கடந்த 3 நாட்களாக ‘104’ மருத்துவ உதவி சேவை
மையம் மூலம் உளவியல் ஆலோசனை வழங்கப் பட்டு வருகிறது. ‘104’ என்ற தொலைபேசி
எண்ணை தொடர்பு கொள்ளும் மாணவ, மாணவி களுக்கு அரசு மனநல டாக்டர்கள், உளவியல்
நிபுணர்கள் அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனைகளை வழங்கு கின்றனர்.
‘தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிடுவதும், மதிப்பெண் குறைவதும் மிகவும்
சாதாரண விஷயங்கள். இதற்காக தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது.
இதோடு வாழ்க்கை முடிந்து விடவில்லை. தேர்வு முடிவு என்பது வாழ்க்கையின் ஒரு
சிறிய கட்டம். இன்னும் சாதனை படைக்க வேண்டியது நிறைய உள்ளது’ என்பதுபோல
தன்னம்பிக்கை கொடுக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதை யடுத்து தேர்வில்
வெற்றி வாய்ப்பை தவறவிட்ட மற்றும் குறைவாக மதிப்பெண் எடுத்த தால் மிகவும்
சங்கடமாக உணர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் ஆயிரக்
கணக்கானோர் 104-ஐ தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுள்ளனர். நேற்று ஒரே
நாளில் மட்டும் 6 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் 104-ஐ தொடர்பு கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான நாளில் 2,300 பேர் தொடர்பு
கொண்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...