தமிழகத்தில், பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை, மூன்று நாட்களில்,
ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. அண்ணா பல்கலைக்குட்பட்ட, 595 பொறியியல்
கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப
வினியோகம், மே, 6ம் தேதி துவங்கியது.
சென்னையில், நான்கு மையங்கள் உட்பட, தமிழகம் முழுவதும்,
60 மையங்களில், விண்ணப்பங்கள் விற்கப்படுகின்றன. மூன்றாவது நாளான நேற்று,
விண்ணப்ப விற்பனை ஒரு லட்சத்தைத் தாண்டியது. முதல் நாளில், 58,600;
இரண்டாம் நாளில், 22,968 பேர் விண்ணப்பம் வாங்கினர். நேற்று மாலை, 5.00 மணி
வரை, 32,803 விண்ணப்பங்கள் விற்பனையாகின. மொத்தம், 2.40 லட்சம்
விண்ணப்பங்கள் உள்ளன. மூன்று நாட்களில், ஒரு லட்சத்து, 14 ஆயிரத்து, 371
விண்ணப்பங்கள் விற்பனையாகிஉள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...