வரதராஜ பெருமாள் கோயிலில் வரும் 1-ம் தேதி நடைபெற உள்ள கருடசேவை உற்சவத்தை
முன்னிட்டு, அன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை
அளிக்கப் படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரம் மோற்சவம் வரும் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.இதைத் தொடர்ந்து வரும் 1-ம் தேதி திங்கள்கிழமை பிரசித்தி பெற்ற கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள் ளூர் விடுமுறை அளிக்கப் படுவதாக, மாவட்ட ஆட்சியர் சண்முகம் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஜூன் மாதம் 2-வது சனிக் கிழமையான வரும்13-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...