தமிழகத்தில்
இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே
இருக்கும் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள்
குறைவு, வேலை வாய்ப்பு குறைவு ஆகியவையே, இன்ஜினியரிங் படிப்பு மீது
மாணவர்களுக்கு மோகம் குறைந்துபோனதற்கு காரணங்களாக கூறப்படுகிறது.
தமிழகத்தில்
அண்ணா பல்கலை உள்பட 4 மையங்கள், பிற பகுதிகளில் 60 மையங்களில்
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்காக 2 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பம்
அச்சிடப்பட்டு, கடந்த 6ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இதில், தமிழகம் முழுவதும், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை விண்ணப்பம்
விற்பனை நேற்றுடன் நிறைவடைந்தது. அண்ணா பல்கலையில் மட்டும் நாளை மாலை வரை
விண்ணப்பம் கிடைக்கும்.
சமர்ப்பிக்க கடைசி
தேதி: பூர்த்தி செய்யப்பட்ட இன்ஜினியரிங் படிப்புக்கான விண்ணப்பத்தை 29ம்
தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விளையாட்டு பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் மட்டும் நேரடியாக
விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து
சமர்ப்பிக்கும் போது மதிப்பெண் உள்பட அனைத்து சான்றிதழ் நகல்கள்
இணைக்கப்பட வேண்டும். இன்ஜினியரிங் கல்வியை பொறுத்தவரை படிக்கும்
மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது என்கிற அதிர்ச்சி
தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தற்போது 538 இன்ஜினியரிங் கல்லூரிகள்
செயல்பாட்டில் உள்ளன. இந்த கல்லூரிகளில் கடந்த ஆண்டு 2 லட்சத்து 5
ஆயிரத்து 463 சீட்டுகள் இருந்தன. இதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம்
விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன. அதில் 2 லட்சத்து 12 ஆயிரம் விண்ணப்பங்களை
மட்டுமே மாணவர்கள் ஆர்வமாக பெற்றுச் சென்றனர். ஆனால், சமர்ப்பிக்கப்பட்ட
விண்ணப்பங்களின் எண்ணிக்கை வெறும் 1 லட்சத்து 70 ஆயிரத்து 500 மட்டுமே.
இதனால் பல கோடிகளை
கொட்டி உருவாக்கப்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில் அரசு மற்றும் தனியார்
ஒதுக்கீட்டில் 30 ஆயிரம் சீட்டுகள் விண்ணப்பம் தாக்கலின் படி காலியாக
இருந்தது. அதே சமயம், அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 75 ஆயிரத்தை கடந்தது.
பலர் விண்ணப்பத்தை சமர்ப்பித்தும் கல்லூரியில் சேரவில்லை. சிலர் வேறு
படிப்புகளுக்கு மாற்றி சென்றுவிட்டனர். ஆனால், இந்த ஆண்டு விண்ணப்பமே
மிகவும் குறைந்த அளவே விற்பனை ஆகி உள்ளது. அதாவது 1 லட்சத்து 89 ஆயிரம்
விண்ணப்பம் மட்டுமே மாணவர்கள் ஆர்வமுடன் ெபற்று சென்றுள்ளனர். ஆனால், இந்த
ஆண்டு கல்லூரிகளில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 500 இடங்கள் காலியாக உள்ளன.
இன்னும் விண்ணப்பத்தை சமர்பிக்க நாளை கடைசி நாள் . அதற்குள் அனைத்து
விண்ணப்பங்களும் சமர்பிக்கப்படும் என்று கூறமுடியாது. எனவே, இந்த ஆண்டு
விண்ணப்ப விநியோகமும் மிகவும் குறைவு.
ரேண்டம் எண்
வெளியீடு: அண்ணா பல்கலை கழகத்தில் ஜூன் மாதம் 15ம் தேதி ரேண்டம் எண்ணும்,
19ம் தேதி ரேங் பட்டியலும் வெளியிடப்படும். இதனை தொடர்ந்து ஜூன் 28ம் தேதி
விளையாட்டு பிரிவினருக்கான கவுன்சலிங்கும், 29ம் தேதி
மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சலிங்கும் நடைபெறும். அதைதொடர்ந்து ஜூலை 1
ம் தேதி பொது பிரிவுக்கான கவுன்சலிங்கும் நடைபெறும். 30 நாட்கள்
தொடர்ச்சியாக கவுன்சலிங் (ஜூலை 31 வரை) நடைபெறும். இதுகுறித்து சமூக
ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் புற்றீசல்போல கல்வி நிறுவனங்கள்
முளைத்துவிட்டன. இந்த கல்வி நிறுவனங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள்
இல்லை. மேலும், கட்டணமும் அதிகமாக உள்ளன. குறிப்பாக இன்ஜினியரிங்
படித்துவிட்டும் வேலை கிடைக்காமல் பலர் திண்டாடி வருகின்றனர். இதற்கெல்லாம்
காரணம் தரமான கல்வி இல்லை என்பதே. எனவேதான் மா ணவர்களிடம் இன்ஜினியரிங்
படிப்பு மீதான மோகம் குறைந்துள்ளது’’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...