10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வௌியாகி உள்ள நிலையில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த 19 மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். 499 மதிப்பெண்கள் பெற்று
முதலிடத்தில் 3 பேரும், 498 மதிப்பெண்கள் பெற்று 6 பேர் இரண்டாமிடமும், 497
மதிப்பெண்கள் பெற்று 10 பேர் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
வாழப்பாடி அரசு பள்ளி சாதனை
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அரசு பள்ளி மாணவி
ஜெயநந்தனா 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதே பள்ளியைச் சேர்ந்த ஹேமப்பிரியா என்ற மாணவி 498 மதிப்பெண் பெற்று
மாநிலத்தில் 2ம் இடம் பிடித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவிகள் மாநில
அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்திருப்பதற்கு கிராம மக்கள் பள்ளி தலைமை
ஆசிரியருக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தனியார் பள்ளிகளின் வியாபார தந்திரங்களுக்கு மத்தியில் அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனை பாராட்டுக்குரியது.9ஆம் வகுப்பு பாடங்களைப் படிக்காமல் 10ஆம் வகுப்பு பாடங்களை 2வருடம் படிக்கும் தனியார் பள்ளி மாணவர்களையும் முந்திய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDelete19 மாணவ / மாணவிகளும் எந்தப்பள்ளி என்று குறிப்பிட்டு இருந்தால் மாணவ / மாணவிகளுக்கும், அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பெருமை செய்ததாக இருக்கும். இருப்பினும் அந்த ஆசிரியப் பெருந்தகைகளை மனதார பாராட்டுவோம். அ.நடராசன், கரூர்.
ReplyDeleteOUR BEST WISHES TO ALL TEACHERS AND HM.....
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDelete