Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜூன் 19ல் மாணவர் தர வரிசைப்படி கல்லூரி பட்டியல் வெளியீடு

       ''கவுன்சிலிங்கில் முடிவெடுக்க வசதியாக, கடந்த ஆண்டில் மாணவர் தர வரிசைப்படியான கல்லூரிகள் பட்டியல், ஜூன், 19ம் தேதி வெளியிடப்படும்,'' என, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.
 
'ரேண்டம்' எண்:


சென்னை, தி.நகரில் நடந்த, 'தினமலர் - உங்களால் முடியும்' நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

* கணிதம் - 100, இயற்பியல் - 50, வேதியியல் - 50 என, 'கட் - ஆப்' மதிப்பெண் கணக்கிடுவோம். ஒரே, 'கட் - ஆப்' என்றால், கணிதத்தில் அதிக மதிப்பெண் பார்க்கப்படும். அதில் சமம் என்றால், இயற்பியலில் அதிக மதிப்பெண் பார்ப்போம். அதுவும் சமம் என்றால், நான்காவது, 'ஆப்ஷனல்' பாட மதிப்பெண் கணக்கிடப்படும். அதுவும் சரியாக இருந்தால், பிறந்த தேதியில் மூத்தவரைப் பார்ப்போம். அதிலும் சமம் என்றால், 'ரேண்டம்' எண்ணில், அதிக மதிப்புக்கு முன்னுரிமை. கடந்த ஆண்டு வெறும், 20 பேருக்குத் தான், 'ரேண்டம்' எண் பயன்படுத்தப்பட்டது.
* இறுதியாக ஒவ்வொரு மாணவருக்கும், ஜூன், 19ல், 'ரேங்க்' என்ற தரவரிசை பட்டியல் வெளியாகும். இந்த எண்ணும், 'கோடிங் ஷீட்' எண்ணும் தான், கவுன்சிலிங்கில் முக்கிய இடம் பெறும். ஜூன், 19ம் தேதி கடந்த ஆண்டு மாணவர்களின் தர வரிசைப் படி, கல்லூரிப் பட்டியல் வெளியாகும். 

* விண்ணப்பங்களை நேரில் அல்லது தபாலில் அனுப்பலாம். விண்ணப்பம் வந்ததும், 'பார்கோடை' சரி பார்த்து, விண்ணப்பம் வந்ததற்கான தகவல், இணையதளத்தில் உடனே பதிவாகும். தினமும், எட்டு முறைக்கு மேல் இணையத்தள தகவல், 'அப்டேட்' ஆகும். கவுன்சிலிங் வரை காலியிடப் பட்டியல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* விண்ணப்பங்களில் தவறு இருந்தால் தகவல் அனுப்புவோம். உடனே பதற்றப்பட வேண்டாம்; கூடுதல் தகவல்களை மெயிலில் அனுப்புங்கள். 'கால் லெட்டர்' கிடைக்காவிட்டாலும், பயப்பட வேண்டாம். ஆன் - லைனில் உங்கள் விண்ணப்ப எண்ணுக்கு, கவுன்சிலிங் தேதி தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கான கவுன்சிலிங் நேரத்துக்கு, இரண்டு, மூன்று மணி நேரம் முன் வந்து, அண்ணா பல்கலையில், 'கால் லெட்டர்' நகல் பெற்றுக் கொள்ளலாம்.

* மாணவர்களுடன் பெற்றோர் வருவது சிறந்த வழி. கவுன்சிலிங்கில் முடிவெடுக்கும் அறையிலும், மாணவருடன் நண்பர்களை விட, பெற்றோர் இருப்பது தான் நல்லது. அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று மாணவர்களோ, நமக்கு எதுவும் தெரியாது என்று பெற்றோரோ நினைக்க வேண்டாம்.

* கவுன்சிலிங் வரும் முன் உங்கள், 'கட் - ஆப்' கணக்கிட்டு, அண்ணா பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலுள்ள கல்லூரிப் பட்டியலில் உங்கள் மதிப்பெண்ணுக்கான குறைந்தது, இருபது கல்லூரிகள் மற்றும் பல பாடப்பிரிவுகள் தேர்வு செய்து கொண்டு வாருங்கள். கவுன்சிலிங் அறையில், நீங்கள் காலியிடத்துக்கு ஏற்ப கல்லூரியைத் தேர்வு செய்ய எளிதாக இருக்கும். அதற்கு முன் உங்கள் பட்டியலில் உள்ள கல்லூரிகளுக்கு பெற்றோருடன் சென்று நேரில் பார்த்து, ஆய்வக வசதி உள்ளிட்டவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள். 

* கவுன்சிலிங் வரும்போது, முதல் கட்ட டிபாசிட், பட்டியலின், பழங்குடியினருக்கு 1,000 ரூபாய்; மற்ற பிரிவினருக்கு, 5,000 ரூபாய் வங்கி, 'டிடி' அல்லது ரொக்கப் பணமாகவோ கொண்டு வாருங்கள். பல்கலை வளாகத்தில் வங்கி உள்ளது. அங்கே,'டிடி' எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கட்டணம் கல்லூரிக்குச் சென்றதும், கல்விக் கட்டணத்தில் கழித்துக் கொள்ளப்படும்.

வெளிப்படையாக...:


கவுன்சிலிங் மையம் அல்லது அண்ணா பல்கலை அருகில், போலியான ஆட்கள் சுற்றித் திரிய வாய்ப்புண்டு. நீங்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் போது, தெரியாத, அங்கீகாரம் இல்லாத ஆட்களின் குறுக்கீடுகள் அல்லது அறிவுரைகளுக்கு இடம் தர வேண்டாம். சில தனியார் கல்லூரிகள் அல்லது வேறு ஏஜன்ட்களின் தகவல்களுக்கு மயங்காதீர்கள். அண்ணா பல்கலைக்கழக ஒற்றைச் சாளர முறையில், நூற்றுக்கு நூறு சதவீதம் வெளிப்படையாக மாணவர் சேர்க்கை நடக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive