நாமக்கல் மாவட்டத்தில் 31020 மாணவ –மாணவிகள்
பிளஸ்–2 தேர்வு எழுதினார்கள். இதில் 29 ஆயிரத்து 702 மாணவ – மாணவிகள்
தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 95.75 ஆகும்.
கடந்த ஆண்டு (2014) மார்ச் மாதம் தேர்ச்சி
விகிதம் 96.60 ஆகும். கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகள் தேர்ச்சி வீதம் 92.82
ஆகும். இந்த ஆண்டு அரசு பள்ளிகள் தேர்ச்சி வீதம் 90.40 ஆகும்.
மாவட்டத்தில் கடந்த ஆண்டு 42 பள்ளிகள்
100–க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. இந்த ஆண்டு 49 பள்ளிகள்
100–க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 12 அரசு பள்ளிகள்
100–க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த ஆண்டு 15 அரசு பள்ளிகள்
100–க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இயற்பியல் பாடத்தில் 28 மாணவ – மாணவிகளும்,
வேதியியல் பாடத்தில் 326 மாணவ – மாணவிகளும், உயிரியல் பாடத்தில் 168 மாணவ –
மாணவிகளும், கணினி அறிவியல் பாடத்தில் 108 மாணவ – மாணவிகளும் கணிதம்
பாடத்தில் 1728 மாணவ – மாணவிகளும் 200–க்கு 200 மதிப்பெண்கள் பெற்று
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...