தமிழக பட்டு வளர்ச்சித்துறையில் காலியாகவுள்ள 171 உதவி ஆய்வாளர், இளநிலை
ஆய்வாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வுக்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த பணியிடங்கள்: 171
1. உதவி ஆய்வாளர் - 14
தகுதி: வேதியியல், தாவரவியல், விலங்கியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்று,
சம்மந்தப்பட்ட பிரிவில் 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. இளநிலை ஆய்வாளர் - 157
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணிகளுக்கு மூன்று வகையான தேர்வுகள் நடத்தப்படும்.
எழுத்துத் தேர்வு,
நேர்முகத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு ஆகிய தேர்வுகளின் கீழ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 32-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: உதவி ஆய்வாளர் பணிகளுக்கு மாதம் ரூ.9,300 - 34,800 என்ற
விகிதத்திலும், இளங்கலை உதவியாளர் பணிகளுக்கு மாதம் ரூ.5,200 - 20,200
வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: பட்டு வளர்ச்சித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான
http://www.tnsericulture.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.06.2015
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...