சென்னை:
''சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி வழங்குவது
குறித்து, மே 15ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும்,'' என, இந்திய மருத்துவ
கவுன்சிலான, எம்.சி.ஐ., தலைவர் ஜெயஸ்ரீபன் மேத்தா கூறினார்.சென்னை வந்த,
எம்.சி.ஐ., தலைவர் ஜெயஸ்ரீபன் மேத்தா, தமிழகத்தில், மருத்துவக் கல்லுாரிகள்
மற்றும் மருத்துவமனைகள் மேம்பாடு குறித்து, ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதார
துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் இயக்குனர்கள் பங்கேற்றனர்.ஆலோசனைக்குப்
பின், ஜெயஸ்ரீபன் மேத்தா கூறியதாவது:நம்மிடம், இரண்டு பிரச்னைகள் உள்ளன.
1957ல் கொண்டு வந்த பாடத்திட்ட கல்வி முறையே, தற்போதும் நடைமுறையில்
உள்ளது; அதை மாற்றி, புதிய பாடத்திட்டங்ளையும், புதிய தொழில் நுட்பங்களையும் அறிமுகம் செய்தால், திறமை மிக்க டாக்டர்களை உருவாக்க முடியும்.
கல்லுாரி படிப்பை முடித்த மருத்துவ மாணவர்கள், 'இன்டர்ன்ஷிப்' எனப்படும்
பயிற்சியை மேற்கொள்ளாமல் வெளியேறுகின்றனர். இப்பயிற்சியை
கட்டாயப்படுத்தினால், அனைவரும்
அனுபவமிக்க டாக்டர்களாக உருவாக முடியும். இவற்றை செயல்படுத்த, முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
சென்னையில், ஓமந்துாரார் வளாக புதிய மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி
தொடர்பாக, எம்.சி.ஐ., ஆய்வு முடிந்து அறிக்கை கிடைத்துள்ளது. மே 15ம்
தேதிக்குள் அனுமதி வழங்க வாய்ப்புள்ளது. இக்கல்லுாரியில், 100 இடங்கள்,
சேர்க்கைக்கு அனுமதிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...