சிவகாசி காரனேசன் துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணிபுரியும்
இடைநிலை ஆசிரியை, கவிஞர் மாலாபிரியதர்ஷினி ஒரே நேரத்தில் 14 புத்தகங்கள்
வெளியிட்டு எழுத்தாளர்கள் மத்தியில் சிறந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி
சாதனை படைத்துள்ளார்.
இதுவரை தமிழ் மொழியில் ஒரே நேரத்தில் திரைப்படக் கவிஞர்
பா.விஜய் 12 புத்தகங்கள் எழுதியதே சாதனையாக இருந்த்தது. அச்சாதனையை
முறியடித்துள்ளார் கவிஞர் மாலாபிரியதர்ஷினி அவர்கள். ஆசிரியைப் பணியைச்
செய்து கொண்டே சப்தமில்லாமல் இச்சாதனையைச் செய்துள்ளார். அச்சாதனை
ஆசிரியருக்கு தமிழக ஆசிரியர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.
அப்புத்தகங்களின் மதிப்புரை மற்றும் பாடு பொருள் ஆய்வரங்கம் சிவகாசி பெல்
ஹோட்டலில் 03.05.20155 அன்று இலக்கியப் போரொளி கலைமாமணி இளசை சுந்தரம்
அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கவிஞர் பெருமக்கள், கல்வியாளர்கள்,
எழுத்தாளார்கள், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு
சிறப்பித்தனர். அவரை வாழ்த்த விரும்புவோர் அவரின் எழுத்துக்களை வாசிக்க
விரும்புவோர் 9790429068 என்ற எண்ணினைத் தொடர்பு கொள்ளவும்.
ஆசிரிய சகோதரிக்கு ஆசிரிய சமுதாயத்தின் சார்பிலும்,நான் சார்ந்துள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகள்
ReplyDeleteKAVIGNAR AASIRIYAIKKU ENATHU MANAMAARNTHA VAALTHUKKAL.
ReplyDelete