பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. அதை இணைய தளத்தில் பார்க்கும்
வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வு எழுதிய மாணவ, மாணவர்கள்
தாங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள இன்டர்நெட் சென்டரில் பார்த்து தெரிந்து
கொள்ளலாம். மேலும், வரும் 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை
அந்தந்த பள்ளியில் பெற்றுக் கொள்ள தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கி 31ம்
தேதி முடிந்தன. ஏப்ரல் மாதம் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து
மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணியும் முடிந்துள்ளன.
இதையடுத்து நாளை தேர்வு முடிவுகளை வெளியிடுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. நாளை காலை 10 மணிக்கு கல்லூரி சாலையில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்தில் முடிவுகள் வெளியிடப்படுகிறது. இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை பார்க்கவும், ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.
மேலும், அந்தந்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தவிரவும், தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை மாணவர்கள் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியரிடம் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.
இணைய தள முகவரிகள்
www.dinakaran.com/result
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in,
www.dge3.tn.nic.in

Thanks a lot for result arrangements.
ReplyDelete