சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் மேல்முறையீட்டு மனு
மீதான தீர்ப்பு வரும் திங்கட்கிழமை வெளியாகும் என அதிகாரபூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர்
வெளியிட்டுள்ள அறிவிக்கையில், சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு
மனுக்கள் மீதான தீர்ப்பு, வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வெளியாகும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பினை கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி குமாரசாமி
வழங்க உள்ளார்.முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, ஜெயலலிதா
உள்ளிட்ட நான்கு பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெங்களூரு
சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பளித்தார்.இதில்
ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாய் அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய
மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.இந்த
தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் சார்பில் மேல்முறையீட்டு
மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த கர்நாடக
உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு, உச்ச நீதிமன்றத்தின் வழிக்காட்டுதல்
அடிப்படையில் தீர்ப்பை வழங்க உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...