மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில்
செயல்படும் துணை ராணுவப் படையில், கூடுதலாக, 11 ஆயிரம் பெண்களை சேர்க்க
முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த படைகளில், குறைந்தபட்சம், 5
சதவீதம் பேராவது, பெண்களாக இருக்க வேண்டும் என்ற இலக்கு எட்டப்படும்.
ராணுவம்,
கடற்படை மற்றும் விமானப் படை போல, துணை ராணுவப் படை என்ற பெயரில்,
உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பிற முக்கிய பொறுப்புகளைக் கொண்ட
படைப்பிரிவும் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வரை, இந்த படை பிரிவில்,
பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படாமல் இருந்த நிலையில், இப்போது அதிகளவில்
பெண்கள் சேர்க்கப்பட்டு, துணை ராணுவப் படையின் மொத்த வீரர் எண்ணிக்கை யில்,
2.15 சதவீதம் பேர், பெண்கள் என்ற சாதனை எட்டப்பட்டு உள்ளது. இதை, 5
சதவீதமாக அடைய வேண்டும் என்பதற்காக, முயற்சிகள் மேற்கொள்ளப்படு கின்றன.
சி.ஆர்.பி.எப்.,
எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை
பாதுகாப்புப் படை, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப்
படை ஆகிய படை பிரிவுகளில், கூடுதலாக, 8,533 பெண்களை பணியமர்த்த முடிவு
செய்யப்பட்டு உள்ளது. அதுபோல, நேபாளம் மற்றும் பூடான் நாடுகளுக்கும்,
இந்தியாவுக்குமான எல்லையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, சஷஸ்ட்ர
சீமா பால் எனப்படும் பெண்கள் படைப்பிரிவில், கூடுதலாக, 2,772 பெண்களை
சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...