Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்று 10ம் வகுப்பு ரிசல்ட்

        பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் வெளியிடுகிறார்.
 
              தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 19ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு துவங்கியது. இதில் 11,827 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ- மாணவியர் எழுதினர். அவர்களில் 5,40,505 பேர் மாணவர்கள். 5,32,186 பேர் மாணவியர். தனித்தேர்வர்களாக 50,429 பேர் தேர்வு எழுதினர். இதற்காக 3298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இது தவிர சென்னை மாவட்டத்தில் 28,124 மாணவர்களும், 29,230 மாணவியரும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். புதுச்சேரியில் மட்டும் 9,703, மாணவர்களும், 9856 மாணவியரும் தேர்வு எழுதியுள்ளனர். தமிழ் வழியில் 7,30,590 பேர் எழுதியுள்ளனர். முதன்முறையாக இந்த ஆண்டு தேர்வில் விடைத்தாளின் முகப்பில் போட்டோவுடன் கூடிய விவரங்கள் மற்றும் பாடங்களுக்கு ஏற்ப பயிற்சி ஏடுகள் இணைத்தும், மொழித்தாள்களுக்கு கோடிட்ட விடைத்தாள்களும் வழங்கப்பட்டன.

தேர்வு முடிந்ததும், ஏப்ரல் மாதம் விடைத்தாள் திருத்தும் பணிகள் வேகமாக நடந்தது. மே மாதம் தொடக்கத்தில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கின. இந்நிலையில் இன்றுகாலை 10 மணிக்கு தேர்வு  முடிவுகள் வெளியாகிறது. கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து 19 பேர் மாநிலத்தில் முதலிடம் பிடித்தனர். 125 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடத்தை பிடித்தனர். 221 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்தனர். கடந்த ஆண்டுபோல இந்தாண்டும் அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைப்பார்கள் என்று எதிர்பார்ப்பு உள்ளது.  பள்ளிகள் மூலம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உரிய தற்காலிக மதிப்பெண் பட்டியல்கள் ஆன்லைன் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அவற்றை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து 29ம் தேதி முதல் வழங்குவார்கள். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள் அந்தந்த தேர்வு மையத்தில் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் தேவைப்பட்டால் ஜூன் 4ம் தேதி முதல் தேர்வுத் துறை இணைய தளத்தில் தங்கள் பிறந்த தேதி, பதிவு எண், ஆகியவற்றை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுகூட்டல்: பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் மறு கூட்டல் செய்ய விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த நாளான 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இரு தாள்கள் கொண்ட ஒவ்வொரு பாடத்துக்கும்(தமிழ், ஆங்கிலம்) ரூ.305, ஒரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை அந்தந்த பள்ளிகள் மூலம் பணமாக செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதில் உள்ள எண்ணைக் கொண்டு மறுகூட்டல் முடிவுகளை அறிய முடியும்.




1 Comments:

  1. where can i collect information for fee structures of ias, ips coaching in chennai

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive