'மதிப்பெண் குறைவு என, மாணவர்களை, பெற்றோர் திட்ட வேண்டாம்' என, பெற்றோருக்கு, '104' சேவை மையம் அறிவுறுத்தி உள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. எதிர்பார்த்த மதிப்பெண்
கிடைக்காவிட்டாலோ, தேர்ச்சி பெறாவிட்டாலோ, மாணவர்கள், மன உளைச்சலுக்கு
ஆளாகி, தவறான முடிவு எடுப்பது வழக்கமாக உள்ளது. நல்ல மதிப்பெண் எடுத்தும்,
எதிர்பார்த்த, 'கட்-ஆப்' கிடைக்கவில்லையே என்ற விரக்தியில், தற்கொலை செய்து
கொண்டோரும் உண்டு. போதிய விழிப்புணர்வு இல்லாததும், சரியான வழிகாட்டல்
இல்லாததுமே, இதற்கு காரணம். இது போன்றோர், '104'யை தொடர்பு கொண்டால், நல்ல
மனநிலை பெற முடியும். இதுகுறித்து, '104' சேவை மைய விழிப்புணர்வு மேலாளர்
பிரபுதாஸ் கூறுகையில், ''மதிப்பெண் குறைவால், மாணவர்கள் மன உளைச்சலுக்கு
ஆளாக வாய்ப்புண்டு. பெற்றோர் விழிப்போடு இருக்க வேண்டும்; மாணவர்களை
திட்டாமல், தேற்ற வேண்டும். முடியாவிட்டால், '104'க்கு அழையுங்கள்;
வாழ்வில் ஜெயிக்க உள்ள வாய்ப்புகள் குறித்து, 'கவுன்சிலிங்' தருகிறோம்,''
என்றார்.
நேற்று காலை, '104'ல் தொடர்பு கொண்ட ஒருவர், 'என் மகள், 'கட்-ஆப்'
மதிப்பெண், 195 கிடைக்கும் என, எதிர்பார்த்தார். தேர்வின் போது, நான்கு ஒரு
மதிப்பெண் விடைகள் தெரியாத விரக்தியில், விடைத்தாளின் குறுக்கே, கோடு
போட்டு அடித்து விட்டு, வந்து விட்டார். இன்று தான், விவரத்தை கூறினார்.
இனி என்ன செய்வது' என, கேட்டார். 'கவலை வேண்டாம்; உடனடியாக துணைத் தேர்வை
எழுதலாம். குழந்தைக்கு ஆறுதல் கூறுங்கள்; நீங்கள், 'டென்ஷன்' ஆக வேண்டாம்;
எதிர்பார்த்த, 'கட்-ஆப்' பெறலாம்' என, ஆறுதல் கூறினோம். அடுத்த தேர்வுக்கு
தயாராகி விட்டனர் என, '104' மைய அதிகாரிகள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...