பத்தாம்
வகுப்பு விடைத்தாள் திருத்தம் நேற்றுடன் முடிந்தது; மதிப்பெண் சான்றிதழ்
தயாரிக்கும் பணி துவங்கியது.10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 19ல்
துவங்கி, ஏப்., 10ல் முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 11,827
பள்ளிகளில் இருந்து, 10.72 லட்சம் பேர் எழுதினர்.விடைத்தாள் திருத்தம்,
ஏப்., 20ம் தேதி, மாநிலம் முழுவதும், 73 மையங்களில் துவங்கியது. முக்கியப்
பாடங்களின் விடைத்தாள்கள், 25ம் தேதியுடன் திருத்தி முடிக்கப்பட்டன;
மொழிப்பாடங்கள், 28ம் தேதி வரை திருத்தப்பட்டன.
இதையடுத்து, விடை திருத்த மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோரின் சரிபார்ப்பு பணி, நேற்றுடன் முடிந்து, மதிப்பெண் பட்டியல் 'சிடி'க்களாக, தேர்வுத் துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.இன்று முதல், மாநில தகவல் தொகுப்பு மையம் மூலம், மதிப்பெண் தொகுப்பு மற்றும் சான்றிதழ் தயாரிப்புப் பணி துவங்க உள்ளது. வரும் 21ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...