பி.இ. சேர்க்கை: 10 ஆயிரம் பேர் விண்ணப்பம் சமர்ப்பிப்பு: இதுவரை 1.75 லட்சம் விநியோகம்
பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், திங்கள்கிழமை வரை 10 ஆயிரம் பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே நேரம், விண்ணப்ப விநியோகம் 1.75 லட்சத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில் 570-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 1.80 லட்சத்துக்கும் அதிகமான பி.இ. இடங்களில், 2015-16-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 28-ஆம் தேதி தொடங்க உள்ளது.

முதல் நாளில் விளையாட்டுப் பிரிவினருக்கும், ஜூன் 29-இல் மாற்றுத் திறனாளிகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.பொதுப் பிரிவு கலந்தாய்வை ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஜூலை 31-ஆம் தேதியில் முடிக்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் மே 6-ஆம் தேதி தொடங்கியது. பிற மையங்களில் மே 27-ஆம் தேதி வரையிலும், சென்னை அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரையிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 60 மையங்களில் திங்கள்கிழமை மாலை 5 மணி வரை 1 லட்சத்து 74 ஆயிரத்து 714 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும்.
அதன்படி, விண்ணப்பிக்க இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 10 ஆயிரம் பேர் சமர்ப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதன்படி, விண்ணப்பிக்க இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 10 ஆயிரம் பேர் சமர்ப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
விண்ணப்பங்களை www.annauniv.edu என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்தும், பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...